எம். கே. கரீம்

எம். கே. கரீம் (M. K. Kareem - பிறப்பு 20 மே 1936) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தின், கூடலூர் (சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1].

பிறப்பு

தொகு

கரீம், முருங்ககோடன் குஞ்சு முகமது என்பவருக்கு மகனாக 20 மே 1936 ஆம் ஆண்டு பிறந்தவர், வண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

பதவியில்

தொகு
  • 1952 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்,
  • 1952 இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்கச் செயலாளர்,
  • 1954 கூடலூர் வட்டம் காங்கிரஸ் கமிட்டி செயலாளர்,
  • 1962 விவசாயிகளுக்கான பட்டா விநியோக போராட்டக் குழு உறுப்பினர்,
  • 1966 பந்தலூர் தேயிலை தொழிற்சாலை இயக்குநர்,
  • 1982 தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி தலைவர்,
  • 1982 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்,
  • 1982 நீலகிரி மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க பொதுச்செயலாளர்,
  • 1984 கூடலூர் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, இயக்குநர்,
  • 1985 கூடலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன்,
  • 1986 நீலகிரி மாவட்டதேயிலை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர்.[2].

சட்டமன்ற உறுப்பினராக

தொகு

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தின், கூடலூர் (சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமலச்சனை 1,280 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._கரீம்&oldid=4044429" இலிருந்து மீள்விக்கப்பட்டது