எம். ஜி. குலாம் காதர் சாகிப்

எம்.ஜி. குலாம் காதர் சாகிப் திருப்பூரின் முக்கிய தொழிலாக இன்று விளங்கும் பனியன் மற்றும் பின்னலாடைத் தொழிலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.

திருப்பூர் முன்சீப் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த முகம்மது கவுஸ் அவர்களின் புதல்வர்கள் குலாம் காதர் மற்றும் அப்துல் சத்தார் ஆகியோர் தாங்கள் நடத்தி வந்த சினிமா தொழில் தொடர்பாக இயந்திரங்கள் வாங்க கொல்கத்தா நகருக்குச் சென்றிருந்தபோது, அங்கு ஒரு வீட்டில் கையால் இயக்கக்கூடிய பின்னல் பொறியில் பனியன் நூற்பதைக் கண்டார். அதில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சினிமா இயந்திரத்திற்க்கு பதில் பின்னலாடை இயந்திரத்தினை திருப்பூருக்கு வாங்கி வந்தார்.

குடும்பத்தினரின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி தன்னுடைய சகோதரர் சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டு திருப்பூரின் காதர்பேட்டை பகுதியில் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் தொழிற்சாலையை உருவாக்கினார். [1]

மறைவு

தொகு

1960 ஆம் ஆண்டு குலாம் காதர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி 1979 ஆம் ஆண்டு காலமானார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. திருப்பூர் பனியன் நகரமாக உருவானது இவரால் தான்
  2. "பனியன் தொழிலில் பிதாமகன்-கோவை நீலகிரி திருப்பூர் ஸ்பெஷல்". தினத்தந்தி (20 நவம்பர் 2020)

வெளி இணைப்புகள்

தொகு