எம் கௌதம் குமார்

இந்திய அரசியல்வாதி

எம். கௌதம் குமார் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் பெங்களூருவின் 53 வது மேயராக இருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் சாந்திநகர் சட்டமன்றத் தொகுதியின் ஜோகுபல்யா வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அக்டோபர் 1, 2019 அன்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]அத்தேர்தலில் இவர் 129 வாக்குகளையும் ​​காங்கிரஸைச் சேர்ந்த ஆர் சத்யநாராயணா 110 வாக்குகளையும் பெற்றனர்.[2]இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் பெங்களூரு மத்திய பிரிவின் பொருளாளராகவும் உள்ளார்.

எம் கௌதம் குமார்
எம் கௌதம் குமார்
53வது பெங்களூர் மேயர்
பதவியில்
1 அக்டோபர் 2019 – 10 செப்டம்பர் 2020
முன்னையவர்கங்காம்பிகே மல்லிகார்ஜுன்
தொகுதிஜோகுபல்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவார்ப்புரு:தேதி மற்றும் வயது
சிறுகுப்பா, கர்நாடகா
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ரேகா ஜெயின்
பிள்ளைகள்
Harsh Jain

Tanisha Jain

வாழிடம்(s)கேம்பிரிட்ஜ் தளவமைப்பு, பெங்களூர்
கல்விB.Com
இணையத்தளம்Official Website

முன்னதாக பாஜகவின் நகர பிரிவின் கீழ் பல்வேறு பதவிகளை வகித்தவர். பாஜகவின் சாந்திநகர் பிரிவின் செயலாளராக 4 ஆண்டுகள் பணியாற்றிய அவர், 6 ஆண்டுகளாக மாநில யுவ மோர்ச்சாவிலும் பணியாற்றியுள்ளார். பாஜக பெங்களூரின் நகர செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2013–14ல், பிபிஎம்பி கணக்குக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

எம் கௌதம் குமார் சமண சமூகத்தைச் சேர்ந்தவர் .பல்லாரி மாவட்டத்தில் சிறுகுப்பாவைச் சேர்ந்தவர்.[3] அவர் பெங்களூரில் வளர்ந்தவர்.அங்கேயே தனது கல்வியையும் தொடர்ந்தார், [4] அவர் ஒரு வணிகவியல் பட்டதாரி ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP's Goutham Kumar elected Bengaluru's 53rd mayor; Raju is deputy CM". The Times of India.
  2. Ramani, Chitra V. (1 October 2019). "BJP's Gowtham Kumar becomes Bengaluru Mayor" – via www.thehindu.com.
  3. "Bangalore News Oct 1 highlights: M Goutham Kumar is new Bengaluru Mayor, Rammohan Raju his Deputy; triumphant BJP leaders celebrate win". The Indian Express (in Indian English). 2019-10-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.
  4. "Bengaluru gets new mayor, BJP's Goutham Kumar gets elected". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_கௌதம்_குமார்&oldid=3087066" இலிருந்து மீள்விக்கப்பட்டது