எயிட்ஸ் மேலாண்மை

எச்.ஐ.வி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல வைரஸ் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.எச்.ஐ.வி. வைரஸின் வாழ்க்கைச் சுழற்சியின் வெவ்வேறு நிலைகளில் செயல்படும் பல வகையான ஆன்டிரெண்ட்ரோவைரல் முகவர்கள் உள்ளன. பல்வேறு வைரஸ் இலக்குகளில் செயல்படும் பல மருந்துகளின் பயன்பாடு மிகவும் செயல்திறன் வாய்ந்த ஆன்டிரெண்ட்ரோவைரல் தெரபி (HAART) என அறியப்படுகிறது.இந்த ஆன்டிரெண்ட்ரோவைரல் தெரபி எச்.ஐ.வி நோயாளியின் மொத்த வைரல் சுமையை  குறைக்கிறது இதனால்  நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுகளை தடுக்கிறது இதனால் இறப்பு விகிதம் குறைகிறது [1]. உலகின் பல பகுதிகளில் இந்த சிகிட்சை முறை பயன்படுத்தபட்டு வருகிறது.  எச்.ஐ.வி நோய்த்தொற்று உள்ள்வர்கள் எயிட்ஸ் நோயாளிகளாக மாறுவதை இது தடுக்கிறது.ஆன்டிரெண்ட்ரோவைரல் தெரபி மூலம் 2010 ல் மட்டும் 700000   [2] பேற்  மறு வாழ்வு பெற்றுள்ளனர். அமெரிக்க சுகாதாரத் துறை [3] ம்ற்றும் உலக சுகாதார நிறுவனம் இரண்டும் எச்.ஐ.வி யோடு வாழும் நோயாளிகளுக்கு ஆன்டிரெண்ட்ரோவைரல் தெரபி அளிக்க பரிந்துரை செய்தது.  மாவட்ட மருத்துவமனைகளில் இதற்காக ஏ.ஆர்.டி மையங்கள் செயல்படுக்னி்றன.
  1. Moore, RD; Chaisson, RE (October 1, 1999). "Natural history of HIV infection in the era of combination antiretroviral therapy". AIDS. 13 (14): 1933–42. PubMed. doi:10.1097/00002030-199910010-00017.
  2. ^ Fauci, AS (25 July 2012). "Toward an AIDS-free generation". JAMA. 308 (4): 343. doi:10.1001/jama.2012.8142.
  3. Jump up to: a b c "Guidelines: HIV". World Health Organization. Retrieved 2015-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எயிட்ஸ்_மேலாண்மை&oldid=2759595" இலிருந்து மீள்விக்கப்பட்டது