எரியும் பூந்தோட்டம் (நூல்)

எரியும் பூந்தோட்டம் என்னும் புதினம், சாகித்திய அகாதெமி விருது பெற்ற காலுதுன்ன பூலதோட என்னும் தெலுங்கு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். மூலநூலின் ஆசிரியர் சலீம். இப்புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளவர் சாந்தாதத்.[1] ஒருவர் தடம்மாறிச் செய்த தவறொன்றின் விளைவாகத் அவர்தம் தனிவாழ்விலும் குடும்பவாழ்விலும் ஏற்படும் சிக்கல்களையும் மனக்குழப்பங்களையும் பேசுகிறது இப்புதினம். வேறொருவர் செய்த தவறுக்குப் பலியாகும் ஒருவரின் வலியும் அவலமும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எயிட்சு நோய் குறித்தும், அந்நோய்க்கு ஆளானவர்கள் மீதான சமூகத்தின் தாக்குதல்கள், வன்மங்கள், அச்சங்கள், ஐயங்கள் குறித்தும் ஆழமான ஆய்வொன்றை முன்வைக்கும் இப்புதினம், அந்நோய் குறித்த புரிதலின்மையால் ஏற்படும் விளைவுகளை விளக்கி அதனைப் புரிந்துகொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது. மேலும், சமூகத்தால் விலக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்கின்ற மக்களின் அவலநிலையையும் அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் வாய்ப்புகளையும் அடையாளங்காட்டுகிறது.

எரியும் பூந்தோட்டம்
நூல் பெயர்:எரியும் பூந்தோட்டம்
ஆசிரியர்(கள்):மூலநூலாசிரியர்: சலீம்,
மொழிபெயர்ப்பாளர்:சாந்தாதத்
வகை:புதினம்
துறை:மொழிபெயர்ப்பு புதினம்
மொழி:தமிழ்
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

கதைமாந்தர்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. எரியும் பூந்தோட்டம் நூலின் முதற்பக்கம்