எருமணம்
எருமணம் என்பது ஒரு வகை மண். மகளிர் இதனைத் தன் கூந்தலில் பூசிக்கொண்டு நீராடும்போது கூந்தலைக் கழுவுவர். இதனால் கூந்தலில் படிந்த அழுக்கு நீங்கிக் கூந்தல் தூய்மை ஆகும். அத்துடன் எருமண மண்ணுக்கு ஒருவகை மணமும் உண்டு. மணம் இருப்பதனால்தான் இந்த மண்ணுக்கு 'எருமணம்' என்னும் பெயர் காரணப்பெயராய் அமைந்தது.
எருமணம் கொண்டுவருவதற்காகத் தலைவி ஒருத்தி தனியே பொழிலுக்குச் சென்றதாகச் சங்க காலப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும் (குறுந்தொகை 113)