எர்னஸ்ட் ஜே. எச். மெக்கே
எர்னஸ்ட் ஜான் ஹென்றி மேக்கே (Ernest J. H. Mackay, 5 யூலை 1880 – 2 அக்டோபர் 1943) என்பவர் பிரிட்டீசின் பிரிஸ்டலில் இருந்து வந்த தொல்லியலாளர் ஆவார். இவர் மொகெஞ்சதாரோ மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பிற தளங்களில் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகள் செய்ததற்கு பெயர் பெற்றவர்.
எர்னஸ்ட் ஜே. எச். மெக்கே | |
---|---|
பிறப்பு | எர்னஸ்ட் ஜான் ஹென்றி மேக்கே 5 சூலை 1880 பிரிஸ்டல், இங்கிலாந்து |
இறப்பு | 2 அக்டோபர் 1943 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 63)
தேசியம் | பிரித்தானியர் |
மற்ற பெயர்கள் | மெக்கே |
பணி | தொல்லியலாளர் |
அறியப்படுவது | மொஹஞ்சதாரோவில் அகழ்வாய்வுகள் |
வாழ்க்கைத் துணை | டோரதி மேக்கே |
துவக்ககால வாழ்க்கை
தொகுஎர்னஸ்ட் ஜான் ஹென்றி மேக்கே பிரிஸ்டலில் பிறந்தார். இவர் பிரிஸ்டல் கிராமர் பள்ளி மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எம். ஏ மற்றும் டி. எல். ஐ. டி. பட்டங்களைப் பெற்றார்.
இவர் டோரதி மேக்கேவை 1912 இல் திருமணம் செய்துகொண்டார். டோரதி மேக்கோ பி.ஏ பட்டம் மற்றும் விலங்கியலில் பி. எஸ். சி ஆகிய பட்டங்களைப் பெற்ற யு. சி. எல் பட்டதாரியாவார்.[1] இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[2] டோரதி தன் கணவரின் அகழ்வாய்வுகளில் அடிக்கடி பங்கேற்று சொந்தமாக விரிவாக வெளியிட்டார்.[3]
1907 மற்றும் 1912 க்கு இடையில், மேக்கே எகிப்தில் தொல்லியல் அகழ்வாய்வுகளை மேற்கொண்டார், பின்னர் எகிப்தின் தீபன் கல்லறைகளின் ஒளிப்பட ஆய்வுக்காக மூன்று ஆண்டுகள் செலவிட்டார்.[4]
முதல் உலகப் போரின் போது, மேக்கே எகிப்து மற்றும் பாலத்தீனத்தில் உள்ள ராயல் ஆர்மி மெடிக்கல் கார்ப்சுல் இம்பீரியல் கேமல் கார்ப்சுடன் கேப்டனாக பணியாற்றினார். 1919 ஆம் ஆண்டில், பாலத்தீனம் மற்றும் சிரியாவில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்களை ஆய்வு செய்வதற்கான இராணுவ ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[4] 1919 முதல் 1922 வரை, பாலஸ்தீன அரசாங்கத்தின் பழங்காலப் பொருட்களின் பாதுகாவலராக இருந்தார்.[4]
சிந்து சமவெளி நாகரிகம்
தொகுமொகெஞ்சதரோவில் (கிமு 2500 மற்றும் கிமு 1900) அகழ்வாய்வுக்காக மேக்கே நன்கு அறியப்பட்டார். இவர் 1926 முதல் 1931 வரை அந்த இடத்தில் பெரிய அகழ்வாய்வுகளைச் செய்தார். 1936-37 ஆம் ஆண்டில் விரிவான தள அறிக்கையை வெளியிட்டார். அது 1942 இல் வெளியிடப்பட்டது. இவர் சன்குதரோவில் அகழ்வாய்வுக்குத் திட்டமிடார். டபிள்யூ. நார்மன் பிரவுனுடனும், தன் மனைவியுடனும் சேர்ந்து 1935-36 இல் சன்குதாரோவுக்குச் சென்றார்.[5]
புத்தகங்கள்
தொகுகட்டுரை
தொகு- Ernest J. H. Mackay (1920). "Observations on a megalithic building at Bet Sawir (Palestine)". Journal of the Palestine Oriental Society 1: 95–102. https://archive.org/details/journalofpalesti01paleuoft/page/95/mode/1up.
இறப்பு
தொகுஇவர் 2, அக்டோபர், 1943 அன்று தனது 63 வயதில் இங்கிலாந்தின், இலண்டனில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Thornton, Amara. "Discovering Dorothy", https://www.readingroomnotes.com/home/discovering-dorothy
- ↑ Kaczanowicz, Marta. "Dorothy Mackay: A Forgotten Female Pioneer in Archaeology", Muzeológia a kultúrne dedičstvo 11/3 (2023), 71–80, https://www.muzeologia.sk/index_htm_files/MKD_3_23_Kaczanovicz.pdf
- ↑ Kaczanowicz, Marta. "Dorothy Mackay: A Forgotten Female Pioneer in Archaeology", Muzeológia a kultúrne dedičstvo 11/3 (2023), 71–80, https://www.muzeologia.sk/index_htm_files/MKD_3_23_Kaczanovicz.pdf
- ↑ 4.0 4.1 4.2 "Obituary." Times [London, England] 5 Oct. 1943: 6. The Times Digital Archive. Web. 16 Nov. 2014.
- ↑ Possehl, Gregory L. "Ernest J. H. Mackay and the Penn Museum" (PDF). www.pen.museum. University of Pennsylvania Museum. Archived from the original (PDF) on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2014.
- ↑ "Chanbu-daro excavation, 1935-36". Trove.nla.gov.au. National Library of Australia. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
- ↑ 7.0 7.1 "Ernest J. H. MacKay". amazon.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.