ஏர்னெஸ்ட் ஹெமிங்வே

(எர்னஸ்ட் ஹெமிங்வே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) (ஜூலை 21, 1899 – ஜூலை 2, 1961) ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். இவரது தனித்துவமான எழுத்துநடை, மிகக்குறைந்த சொற்பிரயோகக்காரர், 20-ஆம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இவரது சிலிர்ப்பூட்டக்கூடிய சாகச வாழ்வும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920-களின் மத்தியிலிந்து 1950-களின் மத்திவரை எழுதப்பட்டதாகும். ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டதே அவரது புனைவுகளின் வெற்றிக்குக் காரணம். அவரது பெரும்பாலான எழுத்துகள் அமெரிக்க இலக்கியப்பரப்பில் செவ்விலக்கிய தகுதி பெற்றவையாகும். ஏழு புதினங்களும்(நாவல்கள்), ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு புனைவற்ற புத்தகங்ளையும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே பதிப்பித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்குப் பிறகு மூனறு புதினங்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டன. கடலும் கிழவனும் (The Old Man and the Sea) நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டன. இவரது கடலும் கிழவனும் நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் 1961 இல் தற்கொலை செய்து கொண்டார்.

எர்னஸ்டு ஹெமிங்வே
Hemingway in 1923
Hemingway in 1923
பிறப்புஎர்னஸ்டு மில்லர் ஹெமிங்வே
(1899-07-21)சூலை 21, 1899
Oak Park, Illinois, U.S.
இறப்புசூலை 2, 1961(1961-07-02) (அகவை 61)
Ketchum, Idaho, U.S.
தொழில்எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
தேசியம்அமெரிக்கர்
குறிப்பிடத்தக்க விருதுகள்Pulitzer Prize for Fiction (1953)
Nobel Prize in Literature (1954)
துணைவர்Elizabeth Hadley Richardson (1921–1927)
Pauline Pfeiffer (1927–1940)
Martha Gellhorn (1940–1945)
Mary Welsh Hemingway (1946–1961)
பிள்ளைகள்Jack Hemingway (1923–2000)
Patrick Hemingway (1928–)
Gregory Hemingway (1931–2001)
கையொப்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்னெஸ்ட்_ஹெமிங்வே&oldid=3043643" இலிருந்து மீள்விக்கப்பட்டது