எர்பர்ட்டு என்றி டவ்

எர்பர்ட்டு என்றி டவ் (Herbert Henry Dow, 26 பிப்ரவரி 1866 - 15 அக்டோபர் 1930) என்பவர் ஒரு அமெரிக்க வேதியியற்றுறைத் தொழிலதிபர். டவ் கெமிக்கல் கம்பெனி என்னும் பன்னாட்டு வேதியியல் நிறுவனத்தைத் தோற்றுவித்தமைக்குப் பெயர்பெற்றவர். அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் உள்ள கிளீவ்லாந்து நகரத்தின் கேசு வெசுட்டர்ன் ரிசர்வுப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றாவர். பலவித வேதியியல் செயல்முறைகளையும், வேதிச்சேர்மங்களையும், விளைபொருள்களையும் கண்டுபிடித்த பெருமை மிக்கவர். அதோடு ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் திகழ்ந்தவர்.

எர்பர்ட்டு என்றி டவ்
எர்பர்ட்டு என்றி டவ், டவ் கெமிக்கல் கம்பெனி நிறுவனர்
பிறப்பு02-26-1866
பெல்வில், ஒன்றாரியோ, கனடா
இறப்புஅக்டோபர் 15, 1930(1930-10-15) (அகவை 64)
மிட்லாந்து, மிச்சிகன், அமெரிக்கா
துறைவேதியியல்
கல்வி கற்ற இடங்கள்கேசு வெசுட்டர்ன் ரிசர்வுப் பல்கலைக்கழகம், கிளீவ்லாந்து, ஒகையோ, அமெரிக்கா
அறியப்படுவதுடவ் கெமிக்கல் கம்பெனி நிறுவனர்
விருதுகள்பெர்க்கின் பதக்கம் (1930)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பர்ட்டு_என்றி_டவ்&oldid=2303500" இலிருந்து மீள்விக்கப்பட்டது