எர்பெர்ட்டு குரோலி

எர்பெர்ட்டு குரோலி (Herbert David Croly 23 சனவரி 1869—மே 17 1930) என்பவர் அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளர், கல்வியாளர், இதழாளர் ஆவார். இருபதாம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தி நியூ ரிபப்ளிக் என்ற இதழைத் தொடங்கியவர். இவருடைய அரசியல் கொள்கைகளும் கருத்துக்களும் தியோடோர் ரூஸ்வெலட் போன்ற தலைவர்களையும் அமெரிக்க நீதிபதி லேர்னர்ட் ஹாண்ட், அமெரிக்க சுப்ரிம் கோர்ட்டு நீதிபதி பெலீக்சு பிராங்க்பர்டர் போன்றோரையும் கவர்ந்தன.[1]

தி பிராமிஸ் ஆப் அமெரிக்கன் லைப் (1909) என்ற இவர் எழுதிய புத்தகம், அமெரிக்க அரசியல் வரலாற்றில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அலெக்சாண்டர் ஆமில்டன், தாமஸ் ஜெப்பர்சன் ஆகியோரின் சனநாயகத் தன்மை, திறமை வாய்ந்த அரசு ஆகியவற்றைப் பாராட்டியது இந்தப் புத்தகம். அமெரிக்கவுக்கு வலிமையான படை, கடற் படை தேவை என்றும் அமெரிக்காவை வலிமையான நாடாக்க வேண்டும் என்றும் இந்த நூலில் எழுதியிருந்தார்.

'தாராளக் கோட்பாடு என்பது முதலாளியக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு உகந்தது இல்லை' என்னும் கருத்தைக் குரோலி மறுத்தார். கூலிக்காக வேலை என்பது உரிமையின்பாற் பட்டது அன்று எனவும் கருதினார். சமூக இழிவுகளைத் துடைப்பதற்காகச் சமூக நலத்திட்ட சட்டங்கள் இயற்றுவதை எதிர்த்தார். குரோலியின் தாராளக் கருத்துக்கள் அமெரிக்க குடியரசுக் கட்சியின் கொள்கையோடு இயைந்து இருந்தன.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பெர்ட்டு_குரோலி&oldid=3581661" இலிருந்து மீள்விக்கப்பட்டது