எறிதட்டுச் சுடுதல்

எறிதட்டுச் சுடுதல் என்பது, வீசி எறியப்படும் (பறக்கும்) மண்பாண்ட தட்டுகளை இலக்குகளாகக் கொண்டு, அதனை துப்பாக்கியால் குறிவைத்து சுடும் கலை / விளையாட்டு ஆகும்.  

தொழில்நெறிஞர் அளவிலான எறிதட்டுச் சுடுதல் – 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

உயிருள்ள பறவைகளை இதில் இலக்காக வைத்து சுடுவதற்கு 1921-ல் ஐக்கிய இராச்சியத்தில் தடை விதிக்கப்பட்டதால், பறவைகளுக்குப் பதிலாக தட்டுகளை காற்றில் எறிந்து சுடும் வழக்கம் தோன்றியது. இப்போதும்கூட, இலக்கை "பேர்டு" (bird, பறவை) என்றும், இலக்கை தாக்கிவிட்டால் அதனை "கில்" (kill, கொல்லப்பட்டது) என்றும், தவறவிட்ட இலக்குகளை "பேர்டு அவே" (bird away, பறவை பறந்துவிட்டது) என்றும் தான் குறிப்பிடுவர்; இலக்குகளை காற்றில் எறியும் இயந்திரத்தை இன்றும்கூட "ட்ராப்" (trap, கூண்டு / எறிப்பொறி) என்று தான் சொல்கின்றனர்.

துணை வடிவங்கள்

தொகு

எறிதட்டுச் சுடுதலில் குறைந்தது 20 வெவ்வேறு வடிவங்கள் இருந்தாலும், மூன்று ஒழுங்கு படுத்தப்பட்ட வடிவங்கள்  உள்ளன.

விளையாடும் தட்டுகள்

தொகு

மற்ற வடிவங்களில் பொதுவாக நிர்ணயித்த  இலக்குகளை மட்டுமே பயன்படுத்துகையில், இந்த வடிவ ஆட்டத்தில் எதுவும் இலக்காக ஆகலாம். பல வகையான எறிதடங்கள், கோணங்கள், வேகங்கள், உயரங்கள், மற்றும் தூரங்களில் (இருந்து) இலக்குகள் வீசப்படும். இதனால் உண்மையான வேட்டையாடல் அனுபவத்தை செயற்கையாக செயல்படுத்த முடியும். இதை ஆங்கிலத்தில் "ஸ்போர்ட்டிங் க்லேஸ்" (sporting clays) என்பர்.

நேர் எறிதட்டு சுடுதல்

தொகு
 
நேர் எறிதட்டு சுடுதல்

சுடுநருக்கு முன்னால், 15 மீ தொலைவில் வைக்கப்பட்டிருக்கும், ஒன்று அல்லது அதற்குமேலான எறிப்பொறியில் (ட்ராப்) இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும். பொதுவாக, பல்வேறு வேகங்கள், கோணங்கள், மற்றும் உயரங்களில், சுடும்-நிலையங்களில் இருந்து தள்ளிப்போகும் வகையில், தட்டுகள் வீசப்படும். இதை ஆங்கிலத்தில் "ட்ராப் ஷூட்டிங்" (trap shooting) என்பர்.

பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்

தொகு
 
பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்

உத்தேசமாக 40 மீ விட்டம் கொண்ட, ஒரு அரைவட்டத்தின், இரு முனைகளிலும் இரண்டு எறிப்பொறிகளில் இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும். இதை ஆங்கிலத்தில் "ஸ்கீட் ஷூட்டிங்" (skeet shooting) என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எறிதட்டுச்_சுடுதல்&oldid=2290092" இலிருந்து மீள்விக்கப்பட்டது