எறிபந்து
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எறிபந்து சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆகும்.
ஆடும் முறை
தொகுதுணியைச் சுருட்டி ஒரு பந்து செய்து கொள்ளப்படும். பிறர்மீது அப்பந்தை எறிதல் வேண்டும். பந்தால் அடி வாங்கியவர் நடுவில் வந்து நின்று மற்றவர் மேல் பந்தை எறிந்து தொடர்ச்சியாக இவ்விளையாட்டு விளையாடப்படும். விளையாட்டில் பங்குபெறுவோர் ஒரு பெரிய வட்டமாக நிற்பர். எறிபவர் பந்துடன் நடுவில் நிற்பார்.
விளையாடும்போது ஓர் உரையாடல் பாட்டுப் பாடப்படும்.
- பந்தோ பந்து
- என்ன பந்து
- எறி பந்து
- யார் மேலே
- உன் மேலே
உன்மேலே என்னும்போது ஒருவர் மீது பந்தை எறிவார். பின்னர் அவர் பிறர்மேல் என ஆட்டம் தொடரும்.
இது ஒரு திளைப்பு விளையாட்டு.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980