எறிவீரப்பட்டணங்கள்
எறிவீரப்பட்டணங்கள் என்பவை வணிகக்குழுக்களால் அரசர், நாட்டார், ஊரார் ஆகியோரின் பாதுகாப்பை நம்பாது தங்கள் சொந்த வணிகவீரர்களின் பாதுகாப்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட காவல் நகரங்களாகும். இவை எறிவீரப்பட்டணம், எறிவீரதளம், வீரதாவளம், எறிபடைநல்லூர், தேசிஎறிவீரப்பட்டணம் எனப் பலவாறாக அழைக்கப்பட்டன. இத்தகைய நகரங்கள் நாடுகள் சந்திக்கும் இடங்களிலும், இரு எல்லைப்புறங்களையொட்டியும், பண்டைய பெருவழிகளிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை நகரம், புரம், பெருந்தெரு, பேரங்காடி, பட்டணம், பட்டினம் என்று அழைக்கப்பட்ட உள்நாடுகளிலிருந்த வணிக நகரங்களிலிருந்து வேறுபட்டவையாகும். இவை உள்நாடுகள், ஊர்களைக் கடந்து சென்று வணிகம் நடத்திய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக்குழுவினருக்குரியவை. இத்தகு வணிக நகரங்கள் இருந்த இடங்களாக அறியப்பட்டுள்ளவற்றுள் சில:
- பனியாநாடு என்றழைக்கப்பட்ட சமுத்திராபட்டி (நத்தம் பகுதி)
- ஆத்தூர்
- பெரியகுளம்
- இடைவழி (சாயல்குடிப் பகுதி)
- திருவாலீஸ்வரம்
- கல்லிடைக்குறிச்சி
- தேவிபட்டினம்[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ வேதாச்சலம், வெ. (2010). "சமுத்திராபட்டி வணிகக்குழு வீரதாவளக் கல்வெட்டு". In அதியமான்,ந.; துளசேந்திரன்,ஆ. (eds.). நிகமம்: வணிக வரலாற்றாய்வுகள் (1 ed.). தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம். pp. 79–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170904274.
வெளி இணைப்பு
தொகு- முனைவர் பா.ஜெயக்குமார். "எறிவீரபட்டினம்". பார்க்கப்பட்ட நாள் 2015-04-25.