எறும்புத் தொடர்வட்டம்

(எறும்பு ஆலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எறும்புத் தொடர்வட்டம் (Ant mill) என்பது எறும்புகளின் நடத்தையின் செயல்பாடு ஒன்றாகும். படை வீரர் எறும்புகளில் (army ants) ஒரு சிறு குழுவை மற்றவற்றிடமிருந்து தனியே பிரிக்கும் போது அவை முக்கிய பெரமோன் (Pheromone) பாதையிலிருந்து தவறி விடுகின்றன. ஆனாலும் வழக்கம் போல அவை ஒன்றையொன்று பின் தொடர்கின்றன. இவ்வாறு வழி தவறிய ஒவ்வோர் எறும்பும் பின்னர் இந்த தொடர் பாதையில் மற்றதைப் பின்தொடரும். இதன் விளைவாக வட்ட வடிவிலான ஓர் எறும்பு வட்டம் உருவாகும். இதையே எறும்புத் தொடர்வட்டம் (ant mill) என்றழைப்பர்.[1] இறுதியில் வழியறியாத இவ்வெறும்புகள் வட்டமடித்து அடித்துக் களைப்புற்று மாண்டு போகும். எறும்புகளின் இந்த நடத்தை ஆய்வகங்களிலும் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலும் பார்த்து அறியப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது தான் என்றாலும் எறும்புகள் தங்களின் மிகச் சிறப்பான தற்கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (self organization) இது போன்றதொரு விலையைத் தர வேண்டியுள்ளது.[2] சில கம்பளிப்புழுக்களிலும் இதையொத்த நிகழ்வு காணப்படுகிறது.[3]

அமெரிக்க இயற்கையியலாளரான வில்லியம் பீப் என்பவர் தான் முதன் முதலாக 1921 ஆம் ஆண்டு கயானாவில் தான் கண்ட ஓர் எறும்பு தொடர் வட்டத்தினை விவரித்தார்.[4]

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Army Ants Trapped by Their Evolutionary History". PLOS Biology 1 (2): e37. 2003. doi:10.1371/journal.pbio.0000037. பப்மெட்:14624241. 
  2. Couzin ID & NR Franks (2003). "Self-organized lane formation and optimized traffic flow in army ants". Proceedings of the Royal Society B 270 (1511): 139–146. doi:10.1098/rspb.2002.2210. பப்மெட்:12590751. 
  3. "A unique case of circular milling in ants, considered in relation to trail following and the general problem of orientation". American Museum Novitates (1253): 1–26. 1944. 
  4. Beebe, William (1921). Edge of the Jungle. New York: Henry Holt and Co. pp. 291–294.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எறும்புத்_தொடர்வட்டம்&oldid=3626102" இலிருந்து மீள்விக்கப்பட்டது