எலிசபெத் வில்லியம்சு
எலிசபெத் இலாங்குதன் வில்லியம்சு (Elizabeth Langdon Williams) (பிப்ரவரி 8, 1879, புட்னாம், கன்னெக்டிகட் – 1981[1]:{{{3}}}) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1903 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் தொடக்கநிலைப் பெண் பட்டதாரிகளில் ஒருவராவார்.[2]:{{{3}}} இவர் பெர்சிவால் உலோவலால் ஒரு புதிய கோளைக் கண்டறிய பணிக்கு அமர்த்தப்பட்டார்.[3]:{{{3}}} இவர் 1915 இல் உலோவலில் இருந்த மாந்தக் கணிப்பாளருக்குத் தலைமை வகித்தார். இவரது கணக்கீடுகள் புளூட்டோவைக் கண்டறிவதற்கான படிமத்தைப் படம்பிடித்தாலும் இவர் வான்காணகத்தை விட்டு 1930 இலேயே விட்டுவிலகிவிட்டார். கிளைடு தாம்பவுக் இறுதியாக 1930 இல் இப்ப்படிமத்தின் சிறப்பை உணர்ந்தார்.[4]:{{{3}}} இவர் 1922 இல் ஜார்ஜ் கால் ஆமிள்டன் எனும் வேறொரு வானியலாளரை மணந்தார்.[1]:{{{3}}}[5]:{{{3}}}
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Schindler, Kevin (2016), Lowell Observatory, Images of America, Arcadia Publishing, p. 63, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439655726
- ↑ "Elizabeth Langdon Williams", Year of Pluto, Lowell Observatory Archives, பார்க்கப்பட்ட நாள் 2017-08-09
- ↑ Littmann, Mark (2004), Planets Beyond: Discovering the Outer Solar System, Dover Books on Astronomy, Courier Corporation, p. 67, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486436029
- ↑ "Elizabeth Langdon Williams", Storied Women of MIT, Massachusetts Institute of Technology
- ↑ Putnam, William Lowell (2002), Percival Lowell's Big Red Car: The Tale of an Astronomer and a 1911 Stevens-Duryea, McFarland, p. 144, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786412341