எலியும் பூனையும்

எலியும் பூனையும் விளையாட்டு தொடக்கப் பள்ளிகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு உற்சாகம் தரும் ஒன்று.

விவரம்

தொகு

ஆடுபவரில் ஒருவர் எலி, மற்றொருவர் பூனை. பலர் கை கோத்துக்கொண்டு நிற்கும் வட்டத்துக்குள் நுழைந்து பூனை எலியைப் பிடிக்கவேண்டும். பூனையும், வட்டத்தாரும் பாட்டுப் பாடி விளையாடுவர்.

சுண்டெலியைப் பார்த்தீர்களா,
ஆமாம்,
எங்கே,
வீட்டுக்குள்ளே,
வரலாமா,
வரக்கூடாது.

வரலாம் என்றால்தான் உள்ளே நுழையலாம். அப்போதும் நுழைய விடாமல் தடுப்பர். வன்மையாகவோ, தந்திரமாகவோ நுழைந்தே பிடிக்க வேண்டும்.

புலியும் ஆடும்
எலியும் பூனையும் விளையாட்டை புலியும் ஆடும் என்றும் வழங்குவர். புலி ஆட்டைப் பிடிக்கும். ஆள்வட்டம் ஆடு தப்பிச்செல்ல உதவும். புலியைத் தடுக்கும். [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், ,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954

மேலும் பார்க்க

தொகு
தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல்

தொகு
சுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு. 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியும்_பூனையும்&oldid=1038488" இலிருந்து மீள்விக்கப்பட்டது