எலியேசர் தேற்றம்

நேர்மின்னி ஒன்றின் மின்புலத்தினூடாக எதிர்மின்னி ஒன்று அந்த நேர்மின்னியின் நடுவை நோக்கிச் (radially) செல்லும்போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த எதிர்மின்னி லோரன்ஸ்-டிராக் (Lorentz-Dirac) சமன்பாட்டின்படி எதிர்பார்த்தது போல நேர்மின்னியால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது நேர்மின்னியில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் 'எல்லை அடைவாக அதிகரிக்கும்' (asymptotically) ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது எலியேசரின் தேற்றம் (Eliezer's theorem) எனப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியேசர்_தேற்றம்&oldid=1661959" இலிருந்து மீள்விக்கப்பட்டது