எலுமிச்சை நீலன்
எலுமிச்சை நீலன் | |
---|---|
எலுமிச்சை நீலன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. lajus
|
இருசொற் பெயரீடு | |
Chilades lajus (Cramer 1782) | |
வேறு பெயர்கள் | |
|
எலுமிச்சை நீலன் என்பது இந்தியாவில் பரவலாக காணப்படும் நீலன்கள் குடும்பத்தை சேர்ந்த சிறு வண்ணத்துப்பூச்சி ஆகும். இவை இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்வான், ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.[1]
தோற்றம்
தொகுஇவற்றின் சிறகளவு 26-30 மிமீ வரை இருக்கும்.[1]
ஆண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் ஊதா கலந்த நீல நிறத்துடன் காணப்படும். வெளி விளிம்பு பகுதியில் பழுப்பு கலந்த கருப்பு நிற பட்டை ( சில வேளைகளில் மங்கிய நிறத்தில் காணப்படலாம் ) காணப்படும். பெண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் பழுப்பு நிறத்திலும், சிறகின் அடித்தள பகுதியில் சிறிது ஊதா நீல நிறம் கலந்தும் காணப்படும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளின் சிறகின் அடிப்புறம் வெளிர் பழுப்பு நிறத்ததுடன், கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு திட்டுகள் கொண்டிருக்கும்.[2]
முன் மற்றும் பின் சிறகின் அடிப்புறத்தில் சிறகின் வெளி விளிம்பிற்கு சற்று கீழே இரு கரும்புள்ளிகள் இணைந்து ஆங்கில எழுத்து "L" போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும். இப்புள்ளிகளை கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை எளிதில் அடையாளம் காணலாம்.
நடத்தை
தொகு- சூரிய ஒளியை அதிகம் நாடி இருப்பவை. திறந்த வெளிகளில் சிறகை விரித்து வெயில் காய்வதை காணலாம்.
- புல்வெளிகளிலும், இவற்றின் உணவு தாவரங்களான தேசி மற்றும் மாதுளை உள்ள இடங்களில் இவற்றை பெரும்பாலும் காணமுடியும்.
- மெதுவாக சிறகடித்து தரையை ஒட்டி பறப்பவை.
படங்கள்
தொகு-
பெண் பூச்சியின் மேற்புற சிறகு தோற்றம்
-
பெண் பூச்சியின் கீழ்ப்புற சிறகு தோற்றம்
-
ஆண் பூச்சியின் மேல் மற்றும் கீழ்ப்புற சிறகு தோற்றம்
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 I.J. GUPTA & MRIDULA MAJUMDAR (2012). HANDBOOK ON DIVERSITY IN SOME OF THE INDIAN BUTTERFLIES. Director, Zoological Surv. India, Kolkata. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181712981.
{{cite book}}
: External link in
(help)|title=
- ↑ முனைவர் பானுமதி (2015). வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. சென்னை: கிரியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382394136.