எலும்புச்சுவடி
எலும்புச்சுவடி (Tally stick)[1] என்பது பண்டைய காலத்தில் எண்கள், அளவுகள், செய்திகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட நினைவகக் கருவியாகும்.
பயன்பாடு
தொகுஇதற்காக விலங்குகளின் உயரமான எலும்புகள் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. சான்றாக, இசாங்கோ எலும்பு (Ishango Bone) என்னும் எலும்புச்சுவடியைக் கொள்ளலாம். பிளைனி தி எல்டர் என்ற வரலாற்று அறிஞர் இதற்காக மரங்களைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார். இதைப்போன்றே மார்கோபோலோவும் நாணயங்கள், பண்டமாற்றம், நிதி, சட்ட நடவடிக்கைகளில் இச்சுவடியைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்.
வகைகள்
தொகு- ஒற்றைச் சரிபார்ப்பு
- பிளவுச் சரிபார்ப்பு
இவ்வெலும்புச்சுவடியில் உள்ளவை பலவும் வழிபாட்டுக் கருவிகளில் காணப்படுகின்றன.