எலும்பு அறை

உடற்கூறியலில் எலும்பு அறை (sinus) என்பது மூக்கின் அருகில் உள்ள மண்டையோட்டு எலும்பில் அமைந்துள்ள அறைகள் ஆகும்.பொதுவாக மனிதா்களில் மூக்கின் அருகில் நான்கு எலும்பறைகள் ஆகும்.மேலும் உடல் உறுப்புகளில் அல்லது திசுக்களில் உள்ள அசாதாரண வெற்றிடமும் இவ்வாறாக அழைக்கப்படுகிறது.

சொற்பொருள்

தொகு

சைனஸ் (இலத்தீன் மொழியில்) என்னும் சொல் பை வளைவு கிண்ணம் எனப் பொருள்படும்.உடற்கூறியிலில் வெவ்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

மூக்குப்புற எலும்பறைகள்

தொகு

மூக்கின் இருப்புறங்களிலும் மொத்தம் நான்கு இணை எலும்பறைகள் காணப்படுகின்றன.அவை

  • கண்ணிடை எலும்பறைகள் இலு கண்களுக்கு இடையே மூக்கின் இருப்பக்கங்களிலும் உள்ளன.
  • நெற்றி எலும்பறைகள் மூக்கின் மேற்பகுதியில் நெற்றியில் அமைந்துள்ள இணை ஆகும்.
  • கண்ண எலும்பறைகள் மூக்கின் இருப்புறங்களிலும் கண்ணப்பகுதியில் அமைந்துள்ளன.
  • ஆப்பு எலும்பறைகள் மண்டையோட்டின் உட்பகுதியில் கண்ணிற்கு நோ் கீழே கழுத்துக்கு சற்று மேலே அமைந்துள்ளன.

பயன்கள்

தொகு
  1. எலும்பறைகள் குரல் உருவாக்கத்தில் பங்குப்பெறுகின்றன
  2. எலும்பறைகள் உட்சுவாசத்தின் போது காற்றினை வடிகட்டி உள்ளனுப்புகிறது.
  3. காற்றறைகளாக அமைந்துள்ளதால் மண்டையோட்டின் எடை குறைவாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  • Sinusitis: Causes, Symptoms, Tests, and Treatment. WebMD - Better information. Better health. 06 Nov. 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பு_அறை&oldid=2637623" இலிருந்து மீள்விக்கப்பட்டது