எல்லெஃப்சென் துறைமுகம்
பவல் தீவிலுள்ள துறைமுகம்
எல்லெஃப்சென் துறைமுகம் (Ellefsen Harbour) (60°44′S 45°3′W) என்பது தெற்கு ஓர்க்னி தீவுகளில் உள்ள கிறிசுடோபர்சன் தீவுக்கும் மைக்கேல்சன் தீவுக்கும் இடையே, பவல் தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். கடற்படைத் தளபதிகளான் பிரித்தானியாவின் கடலோடிகளான சியார்ச்சு பவல் மற்றும் நதானியேல் பால்மர் ஆகியோர் கூட்டுப் பயணம் மேற்கொண்டபோது பவல் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு 1821 ஆம் ஆன்டு திசம்பர் மாதத்தில் அது சுருக்கமாக சாம் பாயிண்டரால் ஆக்கிரமிக்கப்பட்டது. எல்லெஃப்சென் துறைமுகம் என்ற பெயர் முதன் முதலில் 1822 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பவலின் விளக்கப்படத்தில் தோன்றியது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. அணுகப்பட்டது 2012-02-28.