எல்லெசுமியர் தீவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எல்லெசுமியர் தீவு கனடாவின் ஆட்சிப்பகுதியான நுனாவுத்தைச் சேர்ந்த கிக்கிக்தாலுக் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். கனடாவின் ஆக்டிக் தீவுக்கூட்டங்களுக்குள் அடங்கிய இது, குயீன் எலிசபெத் தீவுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. 196,235 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத் தீவு உலகின் பத்தாவது பெரிய தீவும், கனடாவின் மூன்றாவது பெரிய தீவும் ஆகும். ஆர்க்கிட் மலைத்தொடர்த் தொகுதி எல்லெசுமியர் தீவின் பெரும்பகுதியை மூடியுள்ளது. இதனால் கனடாவின் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களில் உள்ள தீவுகளில் கூடிய மலைப்பாங்கான தீவு இதுவாக உள்ளது. "ஆர்க்டிக் வில்லோ" எனப்படும் மரவகையே இத்தீவில் வளரும் ஒரே மரவகை ஆகும்.
![]() | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வட கனடா |
ஆள்கூறுகள் | 80°10′N 079°05′W / 80.167°N 79.083°Wஆள்கூறுகள்: 80°10′N 079°05′W / 80.167°N 79.083°W |
தீவுக்கூட்டம் | குயீன் எலிசபெத் தீவுகள் |
பரப்பளவின்படி, தரவரிசை | 10வது |
உயர்ந்த புள்ளி | பார்பீயூ கொடுமுடி |
நிர்வாகம் | |
கனடா | |
ஆட்சிப்பகுதி | ![]() |
பெரிய குடியிருப்பு | கிரிசே பியோர்ட் (மக். 141) |
மக்கள் | |
மக்கள்தொகை | 146 (2006) |