எல்லெர்மான் குண்டுகள்

எல்லெர்மான் குண்டுகள் (Ellerman bombs) என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பெர்டினாண்ட் எல்லெர்மான்[1] என்பவர் குறிப்பாக சூரிய வெடிப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்தார் என்பதால், நுண்ணிய இச்சூரியப் பிழம்புகளுக்கு எல்லெர்மான் குண்டுகள் எனப்பெயரிடப்பட்டது. முதன்முதலில் 1917 ஆம் ஆண்டு[2] கட்டுரை ஒன்றில் இவர் இதைப்பற்றி விவரித்துள்ளார். அவை பார்ப்பதற்கு தோராயமாக எதிரெதிர் மின்சுமை கொண்ட இரண்டு நகரும் இழைகளைப் போலத் தோற்றமளிக்கும் என்கிறார். பாய்ந்து செல்லும் இவ்விழைகள் இரண்டும் சூரிய ஒளிமண்டலத்தில் சந்திக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-03-17.
  2. Ellerman, Ferdinand (1917). "Solar Hydrogen "bombs"". The Astrophysical Journal 46: 298. doi:10.1086/142366. Bibcode: 1917ApJ....46..298E. https://archive.org/details/sim_astrophysical-journal_1917-11_46_4/page/298. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லெர்மான்_குண்டுகள்&oldid=3546042" இலிருந்து மீள்விக்கப்பட்டது