எல். என். சாத்திரி

இந்தியப் பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர்

எல். என். சாத்திரி (L. N. Shastri) 30 ஆகத்து 1971 - 30 ஆகத்து 2017) சைதன்யா என்றும் அறியப்படும் இவர் இந்தியப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக கன்னடத் திரைப்படத்துறையில் பணி புரிகிறார். அஜகஜன்தாரா (1991) திரைப்படத்தில் பின்னணி பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 3000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது நண்பர்களின் பரிந்துரையின் பேரில், இவர் தன்னை சைதன்யா என மறுபெயரிட்டார். கனசலு நீனே மனசளு நீனே (1998) படம் தொடங்கி 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எல். என். சாத்திரி
பிற பெயர்கள்சைதன்யா
பிறப்பு(1971-08-30)30 ஆகத்து 1971
இறப்பு30 ஆகத்து 2017(2017-08-30) (அகவை 46)
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்1991–2017

பாடகராக இவரது மிகப் பெரிய வெற்றிப் பாடல் ஜானுமடா ஜோடி (1996) திரைப்படத்திலிருந்து "கொலுமண்டே ஜங்கமதேவரு" என்ற பாடலாகும். இது இவருக்கு தொழிலில் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தது. மேலும், சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதையும் பெற்றுத் தந்தது . அம்சலேகா, வி. மனோகர், வி. அரிகிருஷ்ணா, குருகிரண், அர்ஜுன் ஜன்யா, அனூப் சீலின் உள்ளிட்ட கன்னடத் திரையுலகின் முக்கிய இசை இயக்குநர்களுடன் இவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

எல். என். சாத்திரி சக பாடகி சுமாவை மணந்தார். சுமாவும் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடியுள்ளார்.[1]

இறப்பு

தொகு

குடல் புற்றுநோயால் பாதிக்கப்படிருந்த எல். என். சாத்திரி 30 ஆகத்து 2017 அன்று இறந்தார்.[2]

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._என்._சாத்திரி&oldid=3708231" இலிருந்து மீள்விக்கப்பட்டது