எல். எம். நர்துக்கி
லொறன்சோ எம். நர்துக்கி (Lorenzo M. Narducci, 25 மே 1942 – 21 சூலை 2006) ஒரு இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர். குவைய ஒளியியல் மற்றும் சீரொளியின் ]]நிலையின்மை ஆகியவற்றில் தனது பங்களிப்பு மூலம் அறியப்பட்டார். இவர் சீரொளி இயற்பியல் மற்றும் சீரொளியின் நிலையின்மை உட்பட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் இதழ்கள் மற்றும் பல்வேறு புத்தகங்களின் ஆசிரியராவார்.[1]
நர்துக்கி ஒளியியல் தொடர்பியல் (1987-2006) என்னும் இதழின் இதழாசிாியராகவும், அமெரிக்க ஒளியியல் கமுகத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவர் சீரொளி அறிவியலுக்கான ஐன்ஸ்டீன் பரிசினை 1991 இலும் லேம்ப் பதக்கத்தினை 1999 லும் பெற்றார்.
மேற்காேள்கள்
தொகு- ↑ L. M. Narducci and N. B. Abraham, Laser Physics and Laser Instabilities (World Scientific, London, 1988).