எழுத்துவர்த்தனம்
எழுத்துவர்த்தனம் என்பது சித்திரக்கவி வகைகளில் ஒன்று. பாடலில் எழுத்தின் விரிவு வளரும்.
எடுத்துக்காட்டு
- மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும்,மற் றொன்று
- நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – நிரப்பிய
- வேறோர் எழுத்துய்க்க வீரரா சேந்திரனாட்(டு)
- ஆறாம் எனவுரைக்க லாம். [1]
இதன் விரிவுப் பாங்கு
- மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும் – கா
- மற்றொன்று நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – காவி (என்னும் பூ)
- நிரப்பிய வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு ஆறாம் - காவிரி
குறிப்புகள்
தொகு- ↑ பெருந்தேவனார் வீரசோழிய உரை மேற்கோள் பாடல்
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு இரண்டாம் பாகம், பதிப்பு 2005