எழுத்து (பாட்டியல் பாகுபாடு)

எழுத்தை மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் பாகுபடுத்திக் கண்டன. பாட்டியல் இலக்கணங்கள் எழுத்துகளுக்கு கதியும், இனமும் கற்பிக்கின்றன.

பாட்டியல் இலக்கண நூலார் 15 பேர்களின் சிற்சில பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ள நூல் பன்னிரு பாட்டியல்.
இது தரும் செய்திகள்.

கதி பாகுபாடு [1]தொகு

வானவர், மக்கள், நரகர், விலங்கு என அவை கதியை வரிசைப்படுத்தி நான்கு எனக் காட்டுகின்றன.

 1. அ, இ, உ, எ, க, ச, ட, த, ப ஆகிய ஒன்பது எழுத்துகளும் வானவராகிய தேவர் கதி
 2. ஆ, ஈ, ஊ, ஏ, ங, ஞ, ண, ம ஆகிய ஒன்பதும் மக்கள் கதி.
 3. ஐ, ஔ, ஃ, வ, ள, ன ஆகிய ஆறும் நரகர் கதி.
 4. ஒ, ஓ, ய, ர, ல, ழ ஆகிய ஐந்தும் விலங்கு கதி.

இனப் பாகுபாடுதொகு

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என அவை மக்கள் இனத்தை வரிசைப்படுத்திக் கொள்கின்றன.

உணவுப் பாகுபாடு [2]தொகு

 1. அ, இ, உ, எ, இந்த நான்கும் ஏறிய க, ச, த, ப, ந, ம, வ ஆகியவை அமுத எழுத்துகள்.
 2. பிற நஞ்சு எழுத்துகள்

பால் பாகுபாடு [3]தொகு

 1. குறில் எழுத்துகள் ஆண்பால்
 2. நெடில் எழுத்துகள் பெண்பால்
 3. மெய்யெழுத்துகள் அலிப்பால்

உயிர் 12-உம் ஆண்பால், உயிர்மெய் எழுத்துகள் பெண்பால், மெய்யெழுத்து அலிப்பால் பொய்கையார் கருத்து பன்னிரு பாட்டியல் 53

பருவநிலையைக் காட்டும் தானப் பாகுபாடு [4]தொகு

 1. உயிர்-குறில் எழுத்துகள் பால பருவம்,
 2. உயிர்-நெடில் எழுத்துகள் குமர பருவம்,
 3. உயிர்மெய் எழுத்துகள் அரசு பருவம்,
 4. ஐ, ஔ உயிரும், இவை ஏறிய உயிர்மெய்யும் ஆகிய எழுத்துகள் மூப்புப் பருவம்,
 5. குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய ஆகிய எழுத்துகள் மரணப் பருவம்

இப்படி ஐந்து பருவங்கள்.

மேலும் பாகுபாடு [5]
 1. நட்பு எழுத்துகள்: பால, குமர, அரச நிலை எழுத்துகள்
 2. உதாசீன எழுத்துகள் : மூப்புநிலை எழுத்துகள்
 3. பகை எழுத்துகள்: மரணநிலை எழுத்துகள்

கன்னல் பாகுபாடு [6]தொகு

கிழக்கில் பரிதி, மேற்கில் வருணன், தெற்கில் எமன், வடக்கில் சோமன், நடுவில் பிரமன் எனத் தெய்வ நிலைகளைக் கொள்வர்.

அ வளர்க்கும் எழுத்து
இ இன்ப எழுத்து
உ இயங்கும் எழுத்து
எ உறங்கவைக்கும் எழுத்து
ஒ சாகச் செய்யும் துஞ்சல் எழுத்து

புள் பாகுபாடு [7]தொகு

அ வல்லூறு என்னும் கழுகு
இ ஆந்தை
உ வலியான் என்னும் கழுகு
எ குருகு
ஒ மயில்

நாள் பாகுபாடு [8]தொகு

அசுவனி, பரணி முதலான 27 நாட்களுக்கும் உரிய எழுத்துகள் இவையிவை எனப் பகுத்துக் காட்டப்பட்டு அந்தந்த நாளில் பிறந்தவர்களுக்கு உரிய எழுத்தில் தோடங்கிப் பாடல்கள் பாடவேண்டுமாம்.

 • மங்கலச் சொல்லில் தொடங்கின் இவை பார்க்கவேண்டியது இல்லையாம்

அடிக்குறிப்புகள்தொகு

 1. பன்னிரு பாட்டியல் 19 முதல் 27
 2. பன்னிரு பாட்டியல் 34 முதல் 44
 3. பன்னிரு பாட்டியல் 45 முதல் 53
 4. அகத்தியர் பாட்டியல் பன்னிரு பாட்டியல் 54, 55
 5. பன்னிரு பாட்டியல் 56 முதல் 71
 6. பன்னிரு பாட்டியல் 72 முதல் 78
 7. பன்னிரு பாட்டியல்79, 90
 8. பன்னிரு பாட்டியல் 81 முதல் 96