எழுப்பெழுபது

எழுப்பெழுபது என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற 70 - பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும். இந்நூலில் உள்ள வெறும் பன்னிரெண்டு பாடல்கள்[1] மட்டுமே தற்போது கிடைத்திருக்கின்றது.

  • காலம் 12ஆம் நூற்றாண்டு.

எழுப்பெழுபது வரலாறு தொகு

செங்குந்தத் தலைவர்கள் தங்களுடைய இனத்தின் சிறப்புகளைப் பற்றி ஒட்டக்கூத்தரை பாடச் சொன்னதாகவும், அவர் மறுத்ததால், சிரச்சிங்காதனம் செய்ததாகவும் அறியவருகிறது. அவ்வாறு நடந்த பிறகு, தனித்தனியே இருந்த தலைகளும் உடல்களும் மீண்டும் முன்போல் தம்மில் சேருமாறு நாமகளை வேண்டியதால், சிரச்சிங்காதனம் செய்யப்பட்ட உடல்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததாக சொல்லப்படுகிறது.

ஒட்டக்கூத்தர் தொகு

இவ்வாறு தன்னுடைய நாவன்மையால், பிரிந்த உடல்களை ஒன்று சேர்த்ததால், அவருக்கு ஒட்டக்கூத்தர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவற்றையும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

  1. நேரிசை வெண்பாவையினையும், குந்தர் குணமாட்சியையும் சேர்த்தாமல்

உசாத்துணை தொகு

  • காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் எழுதிய செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926.
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
  • செங்குந்தர் பிரபந்தத் திரட்டு என்னும் நூலில் அடங்கியுள்ள சிற்றிலக்கியங்களுக்கு மு. இராகவையங்கார் ஓர் ஆராய்ச்சி முன்னுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுப்பெழுபது&oldid=1697047" இலிருந்து மீள்விக்கப்பட்டது