எவர்ட் அடையாளம்
எவார்ட் அடையாளம் (Ewart's sign) என்பது இதயத்தைச் சுற்றி அதிக அளவு திரவம் (இதய உறை நீர் ஏற்றம்) உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் உடல் பரிசோதனையின் தொகுப்பாகும்.[1]
ஊடுதட்டலலிருந்து மந்தமான தன்மை (வரலாற்று ரீதியாகத் தரத்தில் "மரம்" என்று விவரிக்கப்பட்டுள்ளது), யாட்டொலி மற்றும் மூச்சுக்குழாய் சுவாச ஒலிகள் இடது தோள் பட்டை எலும்பின் கீழ் கோணத்தில் காணப்படலாம். இதய உரை நீர் ஏற்றம் நுரையீரலின் இடது கீழ் மடலை அழுத்தும் அளவுக்கு அதிகமாகக் காணப்படும். இது கடினமாதல் அல்லது நுரையீரல் விரியாமையை ஏற்படுத்தும்.[2]
பெயர்க்காரணம்
தொகுஎவார்ட் அடையாளம் 1896-ல் வில்லியம் எவர்ட்டால் முதன் முதலில் விவரிக்கப்பட்டது. எனவே எவார்ட் அடையாளம் எனப்பெயரிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Smedema, J; Katjitae, I; Reuter, H; Doubell, A.F (November 2000). "Ewart's sign in tuberculous pericarditis". South African Medical Journal 90 (11): 1115. பப்மெட்:11196032. https://pubmed.ncbi.nlm.nih.gov/11196032/. பார்த்த நாள்: 2 July 2021.
- ↑ "Atelectasis". The Lecturio Medical Concept Library. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
- ↑ W. Ewart: Practical aids in the diagnosis of pericardial effusion, in connection with the question as to surgical treatment.