எவலின் இலேலாந்து
எவலின் இலேலாந்து (Evelyn Leland) (அண். 1870 - அண். 1930) ஓர் அமெரிக்க வானியலாளரும் ஆர்வார்டு கணிப்பாளரும் ஆவார். இவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் எட்வார்டு பிக்கரிங்கோடு பணிசெய்த பெண்களில் ஒருவர். இவர் அங்கு 1889 முதல்1925 வரை பணியாற்றினார். இவர் உடுக்கண கதிர்நிரல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். இவர் மாறும் விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார். வான்காணகத்தினருடன் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ogilvie, Marilyn Bailey; Harvey, Joy Dorothy (2000-01-01). The Biographical Dictionary of Women in Science: L-Z (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 770. ISBN 9780415920407.