எஸ். ஆர். ஜான்கித்

எஸ். ஆர். ஜான்கித் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் முன்னாள் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் ஆவார். புகழ்பெற்ற பவாரியா நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி, பல கொலை மற்றும் கொள்ளைகள் செய்த ஓமா பவாரியா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் தண்டனைப் பெற்று தந்தவர் இவர். இவ்வழக்கில் இவரது முயற்சிகளுக்கு, ஜனாதிபதியால் இவர்க்கு காவல்துறையினருக்கான சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. [1]

எஸ் ஆர் ஜான்கித்

ஆரம்ப வாழ்க்கை தொகு

எஸ்.ஆர்.ஜான்கித், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில், பாந்த்ரா கிராமத்தில் 01.08.1959 அன்று பிறந்தார். இவர் தனது பள்ளிப் படிப்பை கவாஸ் எனும் ஊரில் உள்ள பள்ளியில் முடித்தார். பின்பு ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்றார்.

திரைப்படம் தொகு

கார்த்தியின் படமான தீரன் அதிகாரம் ஒன்று ஜாங்கித்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் கார்த்தி ஜான்கித்தின் கதாப்பாத்திரத்தை தீரன் என்ற பெயரில் நடித்திருந்தார். [2]

குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._ஜான்கித்&oldid=3689034" இருந்து மீள்விக்கப்பட்டது