எஸ். எம். ஆர். வி மேல்நிலைப் பள்ளி
எஸ். எம். ஆர். வி மேல்நிலை பள்ளி (S. M. R. V. Higher Secondary School, சிறீ மூலம்திருநாள் இராம வர்மா மேல்நிலைப் பள்ளி) கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலின் வடசேரி பகுதியில் இயங்கிவரும் ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியாகும்[1]. இப்பள்ளி 1919ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள சாலியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
1985-ல் மாநில அளவில் முதல் மாணவியை உருவாக்கிய பெருமைக்குரிய பள்ளியாகும் இது.
அப்பகுதி மக்கள் மிகுந்த அரசபக்தி உடையவர்கள். தங்களை ஆதரித்த அரசர் சிறீ மூலம் திருநாள் இராம வர்மா பெயரில் இப்பள்ளியை தொடங்கினார்கள். 2011 ஆம் ஆண்டில் மாநில அளவில் மூன்றாவது த்ரம் பெற்ற பள்ளிக்கூடமிது[2]. பிரசிடன்ட் நாயனார், போன்றவர்களின் பெருமுயற்சியால் தொடங்கப்பட்டது.
இப்பள்ளி மூன்று பெரும் பல்கலைக் கழக துணைவேந்தர்களை வழங்கிய பெருமைக்குரியது.முதலாவதாக முனைவர் பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியன் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முதல் துணைவேந்தராக பணியாற்றினார்கள்.அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்கள். அண்ணா பல்கலைக் கழகம் நான்கு மண்டல பல்கலைக் கழகங்களாக ப்பிரிக்கப்பட்ட போது தென்மண்டலத்தில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அண்ணாபல்கலைக்கழக த்துணை வேந்தராக முனைவர் என். காளியப்பன் அதன் துணைவேந்தராக பொறுப்பு வகித்தார்கள்
தற்போது உலக அளவில் அறியப்பட்ட சென்னை,அடையாற்றிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜ் அவர்கள் ஆகஸ்ட்10,2021 ல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டடுள்ளார்கள் இவ்வாறு மூன்று துணைவேந்தர்களை உருவாக்கிய பெருமையினை அப்பள்ளியும் பெறுகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
- ↑ www.hindu.com/2011/05/28/stories/2011052861930600.htm
வ.ந.இ.வ.சா.அ.நிதியின் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2008 11 8 2021 நாளிட்ட பத்திரிகைகள் இந்து தமிழ்,முதலியன.