எஸ். எம். இதாயதுல்லாஹ்

எஸ். எம். இதாயதுல்லாஹ் (பிறப்பு: சூன் 5 1956) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இராமநாதபுரம் பார்த்திபனூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில அமைப்புச் செயலாளரும், எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், புரவலரும், மாநில இலக்கிய அணி, மாநிலச் சிறுபான்மைப் பிரிவின் தலைவரும், ஆங்கிலம், இந்தி, அரபி முதலிய மொழிகளை அறிந்தவரும் கீதை மற்றும் வேத சுலோகங்களைச் சமஸ்கிருத மொழியில் மேடைகளில் அழகுற சொல்வதிலும் வல்லவராவார். இவர் ஒரு தொழிலதிபர். தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பற்கேற்றுவரும் கவிஞர். இவரது ஆசாத் பதிப்பகத்தின் மூலம் பல்வேறு தமிழ் அறிஞர்களின் நூல்களை வெளிக்கொண்ர்ந்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவையின் தலைவரும், ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளருமாவார்.

எழுதிய நூல்கள் தொகு

  • கியூபாவில் நான்
  • கீழைச் சொர்க்கம்
  • திருநபி வாழ்வும் திருக்குறட்பாவும்
  • இந்து சமயமும் திப்பு சுல்தானும்
  • சுக நீதியில் சமநீதி
  • தியாக தீபங்கள்

பெற்ற விருதுகளும், கௌரவங்களும் தொகு

  • தமிழ்மாமணி

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._இதாயதுல்லாஹ்&oldid=2716350" இலிருந்து மீள்விக்கப்பட்டது