எஸ். எம். லால்ஜன் பாஷா

இந்திய அரசியல்வாதி

எஸ். எம். லால்ஜன் பாஷா (S. M. Laljan Basha) (சுமார் 1957 - 15 ஆகஸ்ட் 2013) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், தெலுங்கு தேசம் கட்சியின் துணைத் தலைவராகவும், மாநிலங்களவையில் (2002-2008) ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மக்களவையில் (1991-1996) ஆந்திரப் பிரதேசத் தொகுதியான குண்டூரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வக்ஃபுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். இவரது தம்பி எஸ். எம். ஜியாவுதீன் நான்கு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றார்.

ஆகஸ்ட் 15, 2013 அன்று குண்டூருக்குச் செல்லும் வழியில் விஜயவாடா- ஐதராபாத்து தேசிய நெடுஞ்சாலையில் நல்கொண்டா அருகே நார்கட்பள்ளி என்ற இடத்தில் ஒரு சாலை விபத்தில் இறந்தார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Telugu Desam Party leader Lal Jan Basha dies in accident". NDTV.com. 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2013-09-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._லால்ஜன்_பாஷா&oldid=3818828" இலிருந்து மீள்விக்கப்பட்டது