எஸ். காத்தவராயன்

தமிழக அரசியல்வாதி

எஸ். காத்தவராயன் (S. Kathavarayan,இறப்பு: பிப்ரவரி 28, 2020)[1] என்பவர் தி.மு.க வைச் சேர்ந்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், குடியாத்தம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

2011இல் நகர்மன்ற தலைவராக பணியாற்றியவர் மற்றும் ஒன்றிய இளைஞரணி செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் என படிப்படியாக திமுகவில் முன்னேறி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

திருமணம் செய்து கொள்ளாத இவர், தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார், ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் பிப்ரவரி 28, 2020 அன்று மரணமடைந்தார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._காத்தவராயன்&oldid=2923250" இருந்து மீள்விக்கப்பட்டது