எஸ். சாதிக்
முனைவர். எஸ். சாதிக் (Dr. S. Sathikh) (பிறப்பு : 1934) என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின், முன்னாள் துணை வேந்தர் (26.11.1990-25.11.1993 ) ஆவார்.
பிறப்பு
தொகுதிருநெல்வேலி மாவட்டம் - பாளையங்கோட்டை அருகிலுள்ள பர்கிட்மாநகரம் என்ற கிராமத்தில் 1934 இல் பிறந்தார். சாதிக் இரண்டாவது பிள்ளையாக பிறந்தார் இவருக்கு மூத்த சகோதரியும், இரண்டு சகோதர்களும் உள்ளனர்.
கல்வி
தொகு- திருநெல்வேலி மறைமாவட்ட சங்கப்பள்ளியிலும் (T D T A Elementary School ) பின்னர் செயின்ட் ஜான்ஸ் நடுநிலைப்பள்ளியிலும் பள்ளி கல்வியை பயின்றார். 11 ஆம் வகுப்புக்குப் பிறகு (பின்னர் பள்ளி இறுதி), சாதிக் 1952 இல் பாளையம்கோட்டையில் உள்ள செயின்ட் ஜான் கல்லூரி இடைநிலை வகுப்பில் சேர்ந்தார். பள்ளியில் பயிலும்போதே தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமைபெற்றார்.
- 1955 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றார். பல்கலைக்கழகத்தில் படித்த நான்காண்டு காலமும் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். [1]
- 1963 ஆம் ஆண்டில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் சேர்ந்து முதுநிலை பொறியியல் கல்வியை இயந்திர வடிவமைப்பில் பயின்றார்.
பேராசியராக
தொகுசாதிக் 1959-1963 க்கு இடைபட்ட காலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றினார் அவர் படம் வரைதல், ஹைட்ராலிக் இயந்திரங்கள், இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றைக்கற்றுக் கொடுத்தார். 1965 ஆம் ஆண்டு முதுநிலை பயின்றப்பின் மீண்டும் பேராசியராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்