எஸ். செல்வகணபதி
இந்திய அரசியல்வாதி
எஸ். செல்வகணபதி (S. Selvaganapathy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். செல்வகணபதி இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 3 ஜூன் 2017 முதல் 20 பிப்ரவரி 2021 வரை புதுச்சேரி சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.[1][2] இவர் ஓர் கல்வியாளர் ஆவார். இவர் பள்ளிகள் மற்றும் கல்வியியல் கல்லூரியினைப் புதுச்சேரியில் நடத்தி வருகிறார்.[3]
எஸ். செல்வகணபதி | |
---|---|
நியமன உறுப்பினர் புதுச்சேரி சட்டப் பேரவை | |
பதவியில் 4 ஜூலை 2017 – 20 பிப்ரவரி 2021 | |
முன்னையவர் | த/இ |
பின்னவர் | வி. பி. ராமலிங்கம் |
தொகுதி | நியமன சட்டப்பேரவை உறுப்பினர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | புதுச்சேரி |
தொழில் | கல்வியாளர் |
2021 அக்டோபர் 4ஆம் தேதியன்று பாண்டிச்சேரியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினர் ஒருவரை, தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகச் செல்வகணபதி அறிவிக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 3 BJP loyalists picked for Pondy assembly
- ↑ 'End of Congress govt in Puducherry,' newly nominated BJP MLA
- ↑ Big ripples in little Pondy as BJP gains backdoor entry into Assembly
- ↑ "BJP nominates S Selvaganapathy for Puducherry Rajya Sabha elections". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.