எஸ். ஞானதிரவியம்

இந்திய அரசியல்வாதி

எஸ். ஞானதிரவியம் ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வழக்கு

தொகு

தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் ஞானதிரவியம் இருந்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திருச்சபையின் யோவான் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஞான திரவியம் நீக்கப்பட்டார். புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யோவான் பள்ளி வளாகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஞானதிரவியம், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் பாதிரியார் காட்பிரே நோபிள், மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பாதிரியார் காட்பிரே நோபிள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து ஆயர் பர்ணபாஸ், திமுக தலைமையிடத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஞானதிரவியம் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், அதற்கு தகுந்த விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் அளிக்க வேண்டும், தவறினால் ஒழுங்கு நடவடைக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை கடிதம் விடுத்துள்ளார்.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி". Archived from the original on 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் 2019-05-31. தினத்தந்தி (மே 24, 2019)
  2. பாதிரியார் மீது தாக்குதல்... திமுக எம்பி ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  3. மத போதகர் மீது தாக்குதல்: திமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்கு
  4. நெல்லை சி.எஸ்.ஐ. டயோசீசன் மோதல் விவகாரம்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஞானதிரவியம்&oldid=3943250" இலிருந்து மீள்விக்கப்பட்டது