சி. நடராஜசிவம்

(எஸ். நடராஜசிவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்னையா நடராஜசிவம் (எஸ். நடராஜசிவம், 1946 - சூன் 24, 2020) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகருமாவார். நீண்டகாலம் இலங்கை வானொலியில் பணியாற்றிய பின்னர் சூரியன் எஃப். எம். வானொலியில் நிகழ்ச்சிப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.[1] இவரது மனைவி புவனலோஜினி இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர்.

எஸ். நடராஜசிவம்
பிறப்புசின்னையா நடராஜசிவம்
1946
இறப்புசூன் 24, 2020
அகவை 74
கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விபுனித யோசப்பு கல்லூரி, கொழும்பு
பணிஅறிவிப்பாளர், நடிகர்
பணியகம்இலங்கை வானொலி
அறியப்படுவதுவானொலி அறிவிப்பாளர்
பெற்றோர்சின்னையா
வாழ்க்கைத்
துணை
புவனலோஜினி வேலுப்பிள்ளை (இ. 3 மே 2022)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜசிவத்தின் தந்தை சின்னையா கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தாயார் திருகோணமலையைச் சேர்ந்தவர். கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் கல்வி கற்றார். நடராஜசிவம் இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றித் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பின்னர் அறிவிப்பாளராகப் பயிற்சி எடுத்து வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராக இணைந்து 35 ஆண்டுகள் வரை அங்கு பணியாற்றினார். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றிய புவனோஜினி வேலுப்பிள்ளையைத் திருமணம் புரிந்தார்.

வானொலியில்

தொகு

"ஒதெல்லோ", "நத்தையும் ஆமையும்" முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

மேடை நாடகங்கள்

தொகு

ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர்

  • 'Those who sow thw wind' (காற்றை விதைதவர்கள்) - ஆங்கில நாடகம்

தொலைக்காட்சியில்

தொகு

ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, மருத்துவர் ஜே. ஜெயமோகன் எழுதிய 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.

  • 'லாஹிரு தகசக் - ரூபவாஹினியில் சிங்களத் தொடர்நாடகம் (1985)
  • 'யசோராவய' - சிங்களத் தொடர் நாடகம்
  • 'அவசந்த' - சிங்களத் தொடர் நாடகம்
  • 'வனஸபந்து - சிங்களத் தொடர்நாடகம்
  • 'யுக விலக்துவ' - சிங்களத் தொடர் நாடகம்
  • தென்னிந்திய நடிகை ராதிகா தயாரித்த, மனோபாலா இயக்கிய 'மீண்டும் மீண்டும் நான்'

திரைப்படங்களில்

தொகு
  • இந்தியக் கலைஞர்களும் இணந்து நடித்த பாதை மாறிய பருவங்கள்
  • புலம் பெயர்ந்தவர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'காதல் கடிதம்'
  • 'திரிசூல' - சிங்களத் திரைப்படம்
  • 'யுக கினிமத்த' - சிங்களத் திரைப்படம்
  • 'திகவி' - சிங்களத்திரைப்படம்

மறைவு

தொகு

நடராஜசிவம் சுகவீனமுற்ற நிலையில் 2020 சூன் 24 புதனிரவு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தனது 74-வது அகவையில் காலமானார்.[1] இவரது மனைவி புவனலோஜினி 2022 மே 3 இல் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._நடராஜசிவம்&oldid=3425734" இலிருந்து மீள்விக்கப்பட்டது