எஸ். பி. சத்தியபாமா

எஸ். பி. சத்தியபாமா மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'எஸ். பி. பாமா' எனும் புனைப்பெயரால் எழுத்துத்துறையில் நன்கறியப்பட்ட இவர் வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1980 முதல் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்ற இவர் சிறுகதைகள், கட்டுரைகள், திறனாய்வு, வானொலி நாடகங்கள், தொடர் நாடகங்கள், வானொலிக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

வானொலி மற்றும் தொலைக்காட்சித்துறை

தொகு

"விக்கிரம் கண்ட விசித்திர வழக்குகள்", "தான் என்ற சிறை" போன்ற வானொலித் தொடர் நாடகங்கள் ஒலிநாடாக்களாக வெளியிடப்பட்டுள்ளதுடன், "ஓடும் மேகங்கள்", "வேண்டும் உந்தன் உறவு" ஆகிய நாடகங்களை மலேசியத் தொலைக்காட்சியில் எழுதி இயக்கியும் உள்ள இவர் மலேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைக்கான மாதாந்திர பவுன் பரிசு (2003)
  • மலேசிய பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தினத்தில் சிறப்பு பரிசு(2002)
  • தமிழ் நேசனின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையான சிறுகதைகள் தேர்வில் இரண்டாம் பரிசு (2003)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சத்தியபாமா&oldid=3236601" இலிருந்து மீள்விக்கப்பட்டது