எஸ். பேன்ட் அலைக்கற்றை ஊழல்
எஸ். பேன்ட் அலைக்கற்றை ஊழல் (S-band Spectrum Scam) என்பது இந்திய விண்வெளித்துறையின் வணிக கிளையான ஆந்திரிக்சு கழகமும் தேவாசு மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனமும் எஸ் பிரிவு அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்காக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் இந்திய அரசிற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் ஊழல் ஆகும். இவ்வொப்பந்ததால் அரசுக்கு பேரிழப்பு ஏற்படும் என்ற செய்திதி இந்து நாளிதழ் பெப்ரவரி 6, 2011ம் தேதி அன்று வெளியிட்டது. அதன் பிறகு எழுந்த சர்ச்சையால் ஆந்திரிக்சு-தேவாசு ஒப்பந்தத்தை இந்திய பாதுகாப்பிற்கான முக்கிய அமைச்சரவைக்குழு ரத்து செய்தாது.
வரலாறு
தொகுஇந்திய விண்வெளித்துறையின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 150 மெகா கெட்சு அலைக்கற்றைகளில் 70 மெகா கெட்சு அலைக்கற்றையை தேவாசு மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு சில சேவைகள் செய்யும் வகையில் சனவரி 28, 2005 ம் ஆண்டு 1000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது இந்திய விண்வெளித்துறையின் தலைவராக ஜி. மாதவன் நாயர் பதவி வகித்தார். இவ்வொப்பந்தத்தினால் இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இந்திய அரசின் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சனவரி 2012 இல் எந்த அரசுத்துறை பணிகளிலும் பொறுப்பேற்க இவருக்குத் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.[1] இதனையடுத்து இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னாவின் ஆளுனர் குழுமத் தலைவர் பதவியிலிருந்து நாயர் விலகினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ One, India. "Web". News paper. one india. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
- ↑ "Former ISRO chief steps down from IIT-Patna board". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Former-ISRO-chief-steps-down-from-IIT-Patna-board/articleshow/11658069.cms.