எஸ். முத்துமீரான்
எஸ். முத்துமீரான் (3 மே 1941 – 4 சூலை 2024)[1] இலங்கையின் எழுத்தாளரும், கவிஞரும், நாட்டாரியல் ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் சகல துறைகளிலும் எழுதியவர். இலங்கை வானொலியில் தடாகங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.[2]
எஸ். முத்துமீரான் | |
---|---|
பிறப்பு | சின்னத்தம்பி முத்துமீரான் 3 மே 1941 நிந்தவூர், மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பு | 4 சூலை 2024 நிந்தவூர், மட்டக்களப்பு | (அகவை 83)
தேசியம் | இலங்கை |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | எழுத்தாளர், கவிஞர் |
பெற்றோர் | சின்னத்தம்பி, மீரசாகிபு மீரா உம்மா |
எழுதிய நூல்கள்
தொகு- கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம்
- கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்
- இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்
- இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்
- இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய் மொழிக் கதைகள்
- கிழக்கிலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் – வாழ்வும் வாழ்வாதாரங்களும்
ஆகிய ஆறு நாட்டார் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.[2]
இவற்றுடன் மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதிகளையும், இரண்டு உருவகக்கதைத் தொகுதிகளையும், ஒரு நாடகத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.[2]
விருதுகள்
தொகு- இலக்கிய வேந்தன் - கலாச்சார அமைச்சு 2002
- சாகித்திய பரிசு – வ.கி.கலாச்சார அமைச்சு 1994
மேற்கோள்கள்
தொகு- ↑ "எழுத்தாளர் அல்ஹாஜ் எஸ். முத்துமீரான் காலமானார்!". 4 சூலை 2024. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2024.
- ↑ 2.0 2.1 2.2 "செம்மொழி மாநாட்டில் ஆய்வாளராக கலந்து கொள்ளும் முத்துமீரான்". தினகரன் (இலங்கை). 6 சூன் 2010. Archived from the original on 3 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2024.