ஏகஜடி
ஏகஜடி(एकजटी) அல்லது ஏகஜட(एकजट) பௌத்தத்தில் வணங்கப்படும் 21 தாராக்களில் ஒருவர் ஆவார். இவர் மிகவும் உக்கிரமானவராகவும் ஆற்றல்வாய்ந்தவராகவும் கருதப்படுகிறார்.
இவர் பச்சை தாராவின் மண்டலத்தில் காணப்படுகிறார். எதிரி பயம் நீக்குதல், மகிழ்ச்சியை பரப்புதல் மற்றும் போதி அடைவதற்கு தடைகளாக இருப்பவைகளை நீக்குதல் முதலியவை இவருடைய சக்திகளாக கருதப்படுகின்றன.
ஏகஜடி ரகசிய மந்திரங்களின் பாதுகவலராகவும் கருதப்படுகிறார். அதனால் தான் இவருடைய மந்திரமும் இரகசியமாக இருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் ஏகஜடி மகாசித்தி போதனைகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார்.
சித்தரிப்பு
தொகுஇவர் நீல நிற தோலுடனும் சிகப்பு உச்சிக்கொண்டையுடனும் காணப்படுகிறார். இவருக்கு ஒரு தலை, ஒரு மார்பு, இரண்டு கரங்கள் மற்றும் முக்கண்ணும் உள்ளன. எனினும் இவர் பன்னிரு தலைகளுடனும் 24 கரங்களுடனும் கூட சித்தரிக்கப்படலாம். இவருடைய ஆயுதங்கள் வாள், கத்தி, வஜ்ரம் மற்றும் நீல நிற தாமரை கோடரி
பொதுவான தோற்றத்தில், இவர் கைகளில் கோடரி, கட்வங்கம் மற்றும் கபால பாத்திரத்துடன் காணப்படுகிறார். இவருடைய கட்வங்கத்தில் அக்ஷோப்யரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
இவருடைய நடத்தை உறுதியை குறிக்கிறது. ஆணவத்தின் அடையாளாமன சவத்தின் மீது தன் வலது காலை வைத்துள்ளார். இவர் புண்ணகிக்கும் போது இரு நாக்கும் ஒரு பல்லும் வெளிப்படுகிறது. கபாலத்தால் ஆன மாலையும் புலித்தோலையும் அனிந்து காணப்படுகிறார். தாமரையின் மீது வஜ்ராசனத்தில் அமர்ந்துள்ளார் மேலும் அவரை சுற்றி அறிவாற்றலின் அடையாளமான தீப்பிழம்புகள் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- Beyer, Stephen (1973). The Cult of Tara. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-03635-2
- Norbu, Namkhai (1986). The Crystal and the Way of Light. London: Routledge & Kegan Paul. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1559391359