ஏகாம்ரா கனன்

இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்திலுள்ள தாவரவியல் பூங்கா

ஏகாம்ரா கனன் (Ekamra Kanan) இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். ஏகாம்ரா கனன் தாவரவியல் பூங்கா என்றும் இப்பூங்கா அழைக்கப்படுகிறது.[1] புவனேசுவரத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது மிகப்பெரிய பூங்காவாகவும் நகரத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் பெயர் பெற்றுள்ளது.[2][3]

ஏகாம்ரா கனன்
Ekamra Kanan
ஏகாம்ரா கனன் is located in ஒடிசா
ஏகாம்ரா கனன்
Park location in Odisha, India
வகைதாவரவியல் பூங்கா
அமைவிடம்நயாபள்ளி, புவனேசுவரம்
பரப்பு500 ஏக்கர்
Operated byமண்டல தாவர வள மையம்
திறக்கப்பட்டது1985

1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஏகாம்ரா கனன் தாவரவியல் பூங்கா 500 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.[4] சுமார் 1050 வகையான கற்றாழை தாவரங்கள் இங்கு நிரம்பியுள்ளன. தோட்டத்தின் முக்கிய நோக்கம் அழியும் நிலையிலுள்ள உயிரினமான கற்றாழைகளை பாதுகாப்பது ஆகும். கற்றாழை தவிர இங்கு பல்வேறு வகையான ரோசாக்கள் மற்றும் பல அரிய வகை மரங்களும் காணப்படுகின்றன.

தாவரவியல் பூங்கா ஒடிசாவின் ஆராய்ச்சி நிறுவனமான மண்டல தாவர வள மையத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.[3] பூங்கா சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் அங்குள்ள நீர்வாழ் தோட்டம் களைகளால் நிரம்பியுள்ளது என்றும் இடம் சுத்தமாக இல்லை. என்றும் 2017 ஆம் ஆண்டில், உள்ளூர்வாசிகளும் பார்வையாளர்களும் பூங்காவின் மீது புகார் கூறினர். 2019 ஆம் ஆண்டில் 2 நாள் மலர் கண்காட்சி இங்கு நடத்தப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Sudden fee hike irks Ekamra Kanan visitors" (in en). The Telegraph (India). https://www.telegraphindia.com/states/odisha/sudden-fee-hike-irks-ekamra-kanan-visitors/cid/1399683. பார்த்த நாள்: 16 March 2020. 
  2. "Moral police fear shuts Ekamra Kanan" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Moral-police-fear-shuts-Ekamra-Kanan/articleshow/18507124.cms. பார்த்த நாள்: 16 March 2020. 
  3. 3.0 3.1 "Ekamra faces neglect bane" (in en). The Telegraph (India). https://www.telegraphindia.com/states/odisha/ekamra-faces-neglect-bane/cid/1389374. பார்த்த நாள்: 16 March 2020. 
  4. "#013 - Visit Ekamra Kanan Park - The Regional Plant Resource Centre". 101Bhubaneswar. 7 February 2016. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
  5. "2-day flower show begins at Ekamrakanan" (in en). The Pioneer. https://www.dailypioneer.com/2019/state-editions/2-day-flower-show-begins-at-ekamrakanan.html. பார்த்த நாள்: 16 March 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகாம்ரா_கனன்&oldid=3168689" இலிருந்து மீள்விக்கப்பட்டது