ஏசுகைனைட்டு-(Y)

ஆக்சைடு கனிமம்

ஏசுகைனைட்டு-(Y) (Aeschynite-(Y)) என்பது Y,Ca,Fe,Th)(Ti,Nb)2(O,OH)6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். எசுகைனைட்டு-(Y), ஈசுகைனைட்டு-(Yt), புலோம்சுட்ராண்டைன், பிரியரைட்டு என்ற பெயர்களாலும் இக்கனிமம் அறியப்படுகிறது. இற்றியம், கல்சியம், இரும்பு, தோரியம், தைட்டானியம், நையோபியம், ஆக்சிசன் ஐதரசன் ஆகிய அருமண் கனிமங்களுக்கான கனிமமாக இது கருதப்படுகிறது. கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து ஏசுகைனைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 5 முதல் 6 ஆகும்.

ஏசுகைனைட்டு-(Y)
Aeschynite-(Y)
நார்வே நாட்டின் ஐவ்லாந்து மாகாணத்தில் கிடைத்த சிறந்த, முழுமையான ஏசுகைனைட்டு-(Y) படிகம்
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடு(Y,Ca,Fe,Th)(Ti,Nb)2(O,OH)6
இனங்காணல்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஏசுகைனைட்டு-(Y) கனிமத்தை Aes-Y[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசுகைனைட்டு-(Y)&oldid=4149755" இலிருந்து மீள்விக்கப்பட்டது