ஏஞ்சல் பனியாறு
ஏஞ்சல் பனியாறு (Angel Glacier) என்பது கனடாவின் ஜாஸ்பர் தேசியப்பூங்காவில் உள்ள எடித் கேவெல் மலையின் வடக்குப் பகுதியில் பாயும் ஒரு அகன்ற பனியாறு ஆகும். இறக்கைகள் கொண்ட தேவதையின் தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இந்தப் பனியாற்றிற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது. இது 19 ஆம் நூற்றாண்டில் பெயரிடப்பட்டபோது குறிப்பிடத்தக்க அளவு பெரியதாக இருந்தது. அதன் பின்னர் வேகமாக உருகிய காரணத்தால் இது அதன் வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை. இத்தோற்றம் பெரும்பாலும் மறைந்துவிடும்.[1]
ஏஞ்சல் பனியாறு | |
---|---|
எடித் கேவெல் மலையின் சரிவுகளில் ஏஞ்சல் பனியாறு | |
வகை | மலைப் பனியாறு |
ஆள்கூறுகள் | 52°40′36″N 118°03′44″W / 52.67667°N 118.06222°W |
பரப்பளவு | 1 சதுர கிலோமீட்டர் (0.39 sq mi) |
நீளம் | 1.3 கிலோமீட்டர்கள் (0.81 mi) |
நிகழ்நிலை | Retreating |
கேவெல் மெடோஸ் ஹைக்கிங் பாதையில் இருந்து பார்க்கும் போது இந்தப் பனியாறு காட்சிக்கு எழிலாகத் தெரியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Geocaching (in en-US). Geocaching - The Official Global GPS Cache Hunt Site. http://www.geocaching.com/.