ஏட்ரியாடிக் வடிநிலம்

ஏட்ரியாடிக் அபிசல் சமவெளி, பொதுவாக ஏட்ரியாடிக் வடிநிலம் என்று குறிப்பிடப்படுகிறது, இது ஏட்ரியாடிக் கடலுக்கு அடியில் உள்ள ஒரு பெருங்கடல் படுகை ஆகும். ஏட்ரியாடிக் கடலின் சராசரி ஆழம் 252.5 மீட்டர்கள் (828 அடி) மற்றும் அதன் அதிகபட்ச ஆழம் 1233 மீட்டர்கள் (4045 அடி) இருப்பினும், வடக்கு ஏட்ரியாடிக் படுகை அரிதாக 100 மீட்டர்கள் (330 அடி) ஆழமுடையதாக இருக்கிறது. [1]

ஏட்ரியாடிக் கடலின் ஆழம்

விரிவு

தொகு

வடக்கு ஏட்ரியாடிக் படுகை, வெனிஸ் மற்றும் ட்ரைஸ்டே இடையே அன்கோனா மற்றும் ஜாடரை இணைக்கும் கோட்டை நோக்கியுள்ளது. அதன் வடமேற்கு முனையில் ஆழமானது 15 மீட்டர்கள் (49 அடி) அளவு மட்டுமே உள்ளது. அது படிப்படியாக தென்கிழக்குப் பகுதியை நோக்கி ஆழமடைகிறது. இது மிகப்பெரிய மத்திய தரைக்கடல் கண்டத்திட்டாகவும் அதே நேரத்தில் நீர்த்தப் படுகை மற்றும் அடியில் நீர் உருவாகும் தளமாகும்.[2] மத்திய ஏட்ரியாடிக் படுகையானது அன்கோனா-சதர் கோட்டிற்கு தெற்கே 270 மீட்டர் (890 அடி) ஆழம் கொண்ட மத்திய ஏட்ரியாடிக் குழியுடன் (போமோ குழிவு அல்லது ஜபுகா குழி என்றும் அழைக்கப்படுகிறது). 170 மீட்டர் (560 அடி) ஆழமான பலகுருசாசில் மத்திய ஏட்ரியாடிக் குழிக்கு தெற்கே 1200 மீட்டர் (3900 அடி) ஆழமான தெற்கு அட்ரியாடிக் குழி மற்றும் தெற்கு அட்ரியாடிக் படுகையில் இருந்து மத்திய அட்ரியாடிக் படுகையைப் பிரிக்கிறது. மேலும் தெற்கே, கடல் தளம் 780 மீட்டர்கள் (2560 அடி) வரை உயர்ந்து அயோனியன் கடலின் எல்லையில் ஒட்ரான்டோ சில்லை உருவாக்குகிறது.

தெற்கு அட்ரியாடிக் படுகையானது அதனோடு இணைக்கப்பட்ட வடக்கு அயோனியன் கடலுடன் பல விசயங்களில் ஒத்துப்போகிறது. [3]

மூலங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Blake, Topalović & Schofield 1996.
  2. Cushman-Roisin, Gačić & Poulain 2001.
  3. Bombace 1992, ப. 379–382.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏட்ரியாடிக்_வடிநிலம்&oldid=3402086" இலிருந்து மீள்விக்கப்பட்டது