ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ

ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ, கியூப அதிபர்களான ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் ராவுல் காஸ்ட்ரோ வின் தந்தையாவார். இவரின் முழுப் பெயர் ஏன்ஜல் மரியா படிஸ்டா காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ் என்பதாகும். இவரின் தந்தை மானுவேல் டி காஸ்ட்ரோ ஒய் நன்ஸ்.

ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ
Ángel Castro y Argiz
பிறப்புஏன்ஜல் மரியா படிஸ்டா காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ்
Ángel María Bautista Castro y Argiz

திசம்பர் 5, 1875(1875-12-05)
லங்காரா, லுகோ பிராவின்ஸ், ஸ்பெயின்
இறப்புஅக்டோபர் 21, 1956(1956-10-21) (அகவை 80)
பிரன், கியூபா
இனம்Galician
பணிஎசுப்பானிய இராணுவம், விவசாயி

பிறப்பு மற்றும் பணிதொகு

இவர் ஸ்பெயினில் உள்ள லுகோ பிராவின்ஸில் திசம்பர் 5,1875 ல் பிறந்தார். மிகவும் ஏழை விவசாயியின் மகனான இவர் முறையே தொடக்க கல்வி கல்லாதவர் ஆவார். இவர் பதினேழு வயதில் ஸ்பெயினின் ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் சுதந்திர போருக்காக ஸ்பெயின் ராணுவத்தின் சார்பாகப் போரிட கியூபாவிற்கு 1895 இல் சென்றார். பின் கலககாரர்களை ஸ்பெயின் விரட்டி அடித்தது, அதைத் தொடர்ந்து ரஸ் ஸ்பெயினிற்கு புறப்பட்டார். ஆனால் அவரால் கியூபாவை மறக்க முடியவில்லை. திரும்ப செல்லும் எண்ணத்துடனேயே இருந்தார். ஒருநாள் அவரது நண்பர் கியூபா செல்லலாமா என்று கேட்டவுடன், பெட்டிகளைத் தயார் செய்து கொண்டு கிளம்பினார் ரஸ் காஸ்ட்ரோ. 1878 இல் திரும்ப கியூபாவை அடைந்தார். ஹவானா சென்று இறங்கியதும், அங்கிருந்து ஓரியன்ட் மாகாணத்தைச் சென்று அடைந்தார். அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்தார் ரஸ். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் மிக குறைவான கூலியே கிடைத்தது. கடுமையாக உழைத்தார். நேரம் கிடைக்கும் வேளையில் தோட்டங்களைச் சுற்றிவருவார். அப்போதே ரஸிற்குத் தெரிந்தது 'இந்த கரும்பு தான் நம் வாழ்க்கை' என்று. கடுமையாக பாடுபட்டார். என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே இருந்தவர், சில ஆட்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் இணைத்துக்கொண்டார். பிறகு ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் 'வேலைக்கு ஆள் அனுப்பட்டுமா?' என்று கேட்டார், அவர்களும் ஒப்புக்கொள்ளவே வேலைக்கு ஆட்களை அனுப்பினார். நாட்கள் செல்லச் செல்ல அவரின் கீழ் வேலை செய்வோர் அதிகமானார்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம், வேலைப் பளுவும் குறைவு. நிறுவனங்களும் இவரின் ஆட்களை விரும்பினர். சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் தேவையான ஆட்கள் கிடைத்தால் நிறுவனங்களும் குவிந்தன. விரைவிலேயே ரஸ் பணம் சம்பாதித்து உயர்ந்தார். அதோடு அவர் நிற்கவில்லை. உழைப்பவரின் தாகம் தீர்க்க எலுமிச்சம் பழச்சாற்றை நிலங்களுக்கே சென்று விற்றார். அதுவும் அமோக வெற்றி பெற ரஸ் மிகப்பெரிய நிலப் பிரபு ஆனார். மேலும் எலுமிச்சை சாற்றைக் கைகளில்கூட பிழிய நேரம் இல்லாமல் போக உடனே ஆலை ஒன்றை ஆரம்பித்தார் ரஸ் காஸ்ட்ரோ. மேலும், 1940 ஏக்கரின் சொந்தக்காரர் ஆனார். அந்த நிலங்களில் எல்லாம் கரும்பையும், பைன் மரங்களையும் பயிரிட்டார். பெரிய நிலப்பண்னையாளர் ஆனார்.

திருமண வாழ்வும் குழந்தைகளும்தொகு

இவரின் முதல் திருமணம் மார்ச் 25, 1911 இல் ஆனது. மனைவியின் பெயர் மரியா அர்கோடா ரெய்ஸ். இத்தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மானுவேல் காஸ்ட்ரோ அர்கோடா, மரியா லிலா காஸ்ட்ரோ அர்கோடா, பெட்ரோ எமிலியோ காஸ்ட்ரோ அர்கோடா, அந்தோனியா மரினா காஸ்ட்ரோ அர்கோடா, ஜர்ஜினா காஸ்ட்ரோ அர்கோடா ஆவார். முதல் மனைவி இறந்துபோக சமையல்கார கியூபப் பெண்ணான லினாவுடன் செப்டம்பர் 23, 1903 ல் இருந்து வாழ்ந்து வந்தார். பிடல் காஸ்ட்ரோ பிறந்தபின் முறைபடித் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏழு குழந்தைகள், முதல் குழந்தை ஃபிடல், இரண்டாவது குழந்தை ராவுல், பின் ஐந்து பெண் குழந்தைகள் ஆவர்.

இறப்புதொகு

ரஸ் காஸ்ட்ரோ அர்கிஸ் க்யூபாவின் பிரன் என்னும் இடத்தில், அக்டோபர் 21,1956 இல் குடலில் ரத்தம் வழிந்ததன் காரணமாக இறந்தார்.

இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  • சிம்ம சொப்பனம் -புத்தகம், கிழக்கு பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏன்ஜல்_ரஸ்_காஸ்ட்ரோ&oldid=2712994" இருந்து மீள்விக்கப்பட்டது