ஏய்சின் சோதனை

ஏய்சின் சோதனை (Hay's test) என்பது சிறுநீரில் உள்ள பித்தநீர் உப்புக்கள் இருப்பதை கண்டறிய பயன்படும் ஒரு வேதியியல் சோதனையாகும்[1]. இச்சோதனை ஏய்சு கந்தகப் பூ சோதனை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

செய்முறை

தொகு

ஒரு சோதனைக்குழாயில் மூன்று மில்லிலிட்டர் அளவுக்கு சிறுநீர் எடுத்துக்கொண்டு அதில் கந்தகத் தூள் தூவப்படுகிறது. கந்தகத் தூள் [2] சோதனைக்குழாயின் அடிப்பகுதியில் மூழ்கினால் சோதனையின் முடிவு நேர்மறை என எடுத்துக் கொள்ளப்படுகிறது. பித்த உப்புக்கள் சிறுநீரின் பரப்பு இழுவிசையை குறைக்கும் என்பதால், கந்தகத் தூள் சோதனைக் குழாயின் அடிப்பகுதியில் மூழ்குவதற்குக் காரணமாகிறது.[3][4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. D M Vasudevan (2013). Textbook of Biochemistry for Medical Students. JP Medical Ltd. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5090-530-2.
  2. https://en.wikipedia.org/wiki/Sulfur
  3. Ashok Kumar J (1 January 2007). Textbook of Biochemistry for Nurses. I. K. International Pvt Ltd. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89866-45-7.
  4. Harsh Mohan (30 November 2012). Pathology Practical Book. JP Medical Ltd. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5090-266-0.
  5. Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.
  6. Chary (1 January 2004). Practical Biochemistry for Medical and Dental Students. Jaypee Brothers Publishers. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-233-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏய்சின்_சோதனை&oldid=3087646" இலிருந்து மீள்விக்கப்பட்டது