ஏற்பிணைப்பி

உயிர்வேதியியலில் அல்லது மருந்தியலில் ஒரு உயிர் மூலக்கூற்றுடன் உயிரியல் தேவைகளுக்காக சிக்கலான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு சாரப்பொருள் (பெரும்பாலும் ஒரு சிறிய மூலக்கூறு) ஏற்பிணைப்பி (ligand) எனப்படும். புரத-ஏற்பிணைப்பிப் பிணைப்பில் ஏற்பிணைப்பியானது இலக்குப் புரதம் ஒன்றுடன் பிணைந்து ஒரு சமிக்கையைத் தொடக்கிவைக்கும் மூலக்கூறாக விளங்குகிறது. டி.என்.ஏ-ஏற்பிணைப்பிப் பிணைப்பில் டி.என்.ஏ இரட்டைச்சுருளுடன் பிணையும் ஒரு சிறிய மூலக்கூறாகவோ அல்லது அயனியாகவோ[1] அல்லது ஒரு புரத மூலக்கூறாகவோ[2] இருக்கின்றது. இந்தப் பிணைப்புகள் அயனிப்பிணைப்பு, ஐதரசன் பிணைப்பு, வண்டர்வாலின் விசை போன்ற மூலக்கூற்றிடை விசைகள் மூலம் நிகழ்கின்றது.

மையோகுளோபினுடன் (நீலம்) அதனது ஏற்பிணைப்பி ஈம் (ஆரஞ்சு நிறம்) பிணைப்பில் உள்ளது.

ஏற்பிணைப்பி ஏற்பியுடன் (ஏற்பிப் புரதம்) பிணைந்து அதன் வேதியற் கட்டமைப்பை மாற்றுகின்றது. வேதியல் கட்டமைப்பு மாறிய ஏற்பிப்புரதம் அதன் தொழிற்படு நிலையைத் தீர்மானிக்கின்றது. நொதி வினைபொருட்கள் (substrates), நொதி வினைத்தடுப்பிகள் (inhibitors), வினைச் செயலூக்கிகள், நரம்பிய சமிக்கைபரப்பிகள் (neurotransmitters) ஆகியன ஏற்பிணைப்பிகளுள் அடங்குகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Teif V.B. (2005). "Ligand-induced DNA condensation: choosing the model". Biophysical Journal 89 (4): 2574–2587. doi:10.1529/biophysj.105.063909. பப்மெட்:16085765. 
  2. Teif VB, Rippe K. (2010). "Statistical-mechanical lattice models for protein-DNA binding in chromatin.". Journal of Physics: Condensed Matter 22 (41): 414105. doi:10.1088/0953-8984/22/41/414105. பப்மெட்:21386588. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்பிணைப்பி&oldid=2746832" இலிருந்து மீள்விக்கப்பட்டது